பயர்பாக்ஸ்க்கு அகராதி

பயர்பாக்ஸ் அகராதி நீட்சி நண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம். வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன. மிக விரைவில் மேலதிக விபரங்களுடன் வருகிறேன். அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். 😉 எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில கோப்புக்களை பயன்படுத்தும் தேவையும் ஏற்படுவதுண்டு. இந்த தேவைக்காக இதுவரையும் நான் Explore2fs (தொ-1) (தொ-2) என்ற மென்பொருளையே பாவித்துவந்தேன். […]

இருண்டு போன இதயங்கள் – குறும்டம்

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். இருண்டு போன இதயங்கள் ஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(?), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட குறும்ட போட்டிக்காகவும் உருவாக்கப்பட்டது. கதை/கரு: எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கு உடலுறவு தவிர்ந்த வேறுகாரணங்களும் உண்டு. தெரிந்த விடயம் தான் […]

அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்

வணக்கம், இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்… எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். அரங்கம் – The Arena கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, […]

வலைப்பதிவுகளில் நான்

வலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம்.