தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது

PIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான். சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….

றோட்டு மேல போறான் ஒரு கேடி

இன்று எனது கணனியிலுள்ள பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது இந்த பாடலையும் பல நாட்களின் பின்னர் கேட்க நேர்ந்தது. இது 2005ம் ஆண்டுப்பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கிய ‘முதல் சுவடு‘ இசைத்தொகுப்பில் இடம்பெற்றது. Metal Rock வகை இசையை சார்ந்து அமைந்த இப்பாடல் வரிகளுக்காகவும் இசைக்காகவும் பலரின் எதிர்ப்பை சம்பாதித்த அதேவேளை, இன்னும் அதிக நண்ர்களின் வரவேற்பயும் பெற்றது. நீங்களும் கேட்டுப்பாருங்க…! பாடியோர் : நிதர்ஷன், பிரதீபன், கோகுல்பாடல்வரிகள் : அருணன்இசையமைப்பு : அருணன், சிந்துஜன்தயாரிப்பு, ஒலிக்கலவை : […]

போய்வருக தோழனே!

நீ மறைந்த சேதி கேட்டு நெஞ்சுடைந்தது! நீ கலந்த நினைவுகளில் கண்கசிந்தது! நீ கதைத்த கதைகள் எல்லாம் காதில் கேக்குது! உன் தோளில் கிடந்த எந்தன் கைவலிக்குது! பூமலரும் உன்சிரிப்பை விதி அழித்ததா? பண்பினிலெ சிறந்த உன்னை நாம் இழப்பதா? பழகிவிட்ட நெஞ்சமுன்னை எண்ணி வாடுது! விலகிவிட்ட உன்னுயிரின் பின்னேஓடுது! விழிவழிய மனமழுது விண்ணைப் பார்க்குது! எழுதவரும் கவிதையிலென் கண்ணீர் சேருது! நீ் வளர்த்த நட்புஎன்ற பசுமை சிரித்திடும்! நீங்கிடாது உன்நினைவு! எம்முள் நிலைத்திடும்! போய்வருக தோழனே! […]

ஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke

சோகமாய் உணரவில்லை…ஏனென்றால் நடந்திடக் கூடாத ஒன்று இல்லை என்பதால்…இழப்பென்று எண்ணவில்லை…ஏனென்றால் அதிகமாகவே எமக்கு அளித்துச் சென்றிருப்பதால்… நிஜங்களின் நிழல்களை நிதர்சனமாய் சொன்னவன் நீ…நிழல்களாகிவிட்ட உன் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்..! : : அண்டை அயல்: உயர்நுட்ப மாயாவி Sir Arthur C Clarke, 1917-2008: The Final Goodbye from Colombo இவண்,நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன்

எமது பாடல்கள் முதன் முதலாக வானலைகளில் ஒலிக்க காரணமா இருந்தவர் காண்டீபன் அண்ணா. அவருடனான நட்பு காலத்தால் குறுகியதானாலும், மிகவும் இனிய நண்பர். வேண்டும் வேளைகளில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவர். தனது அறிவிப்பால் இலங்கை நேயர்களின் மனதை கொள்ளைக் கொண்டவரும் தற்போது இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாளராக பணிபுரிந்து வருபவருமான பாலேந்திரன் காண்டீபன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல். நீண்ட நாட்களுக்கு பின் அவரைப்பற்றி அறிய கிடைத்தது, அதை மற்றவர்களுடனும் இங்கு பதிவதன் மூலம் […]