பிரிவுகள்
பயணம் Oliyoodai Tamil Podcast

துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்

குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

துவும்பா: குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

நூற்றைம்பதுக்கும் அதிகமான பூங்காக்களும் பூந்தோட்டங்களும் நிறைந்திருக்கும் துவும்பாவுக்கு பூங்கா நகரம் என்பது மிகவும் பொருத்தமான ஒரு பெயர்தான். இயற்கையையும் அழகியலையும் ஒன்றாக கண்டுகழிக்க பல பிரபலமான பூங்காக்கள் நகரச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன.

நகர மத்தியிலேயே இருக்கும் Queens பூங்காவும் அதனோடு இணைந்த தாவரவியல் பூங்காவும் வருடத்தின் எந்த காலத்திலும் அழகிய மலர்க் காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முதன்மையான இடமாகும். நூற்றுக்கணக்கான வாசனை மலர்களால் நிறைந்திருக்கும் Laurel Bank பூங்காவில் சில மணிநேரங்களைக்கூட நாம் செலவிடலாம்.

துவும்பாவில் பல்வேறு சர்வதேச பின்னணிகளை கொண்ட சிறப்பு பூக்காகளும் இருக்கின்றன. தென் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜப்பானிய பூந்தோட்டம், Annand ஏரிக்கு அருகே இருக்கும் நியூசிலாந்து பூங்கா, மற்றும் ஈரநில தாவரங்களின் பூங்கா என்பன இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

ஆண்டு பூராவும் அழகியலோடு நம்மை வரவேற்கும் துவும்பா வண்ணமயமான மலர்கள் பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்தில் இன்னமும் ரம்யமானது. ஆண்டு தோறும் செப்டெம்பர் மாதம் துவும்பாவில் மலர்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் Grand Central மலர் அணிவகுப்பு, உட்பட பல போட்டிகள், சமூக நிகழ்ச்சிகள் என்று நகரே களைகட்டியிருக்கும்.

துவும்பா நகரின் வரலாறு இங்கிருக்கும் பல கட்டடங்களிலும் அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படுகிறது. நகரின் மத்தியில் இருக்கும் Heritage Street மற்றும் Russell Street பாரம்பரிய கட்டடங்களால் நிறைந்த இரு முக்கிய இடங்களாகும். இங்கிருக்கும் City Hall மற்றும் Empire Theatre கட்டடங்கள் சிறந்த கட்டிடக்கலைக்கும் மீளமைக்கப்பட்ட ஓவிய அலங்காரங்களுக்கும் பிரபலமானவை.

துவும்பா செல்லும் எல்லோருமே தவறாமல் பார்க்கவேண்டிய இன்னுமொரு இடம் Cobb & Co அருங்காட்சியகம். அவுஸ்திரேலியாவின் போக்குவரத்து பாரம்பரியத்தை குறிக்கும் பல்வேறு காட்சிப் பொருட்கள், வாகனங்கள், குதிரை வண்டில்கள் என நிறைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். துவும்பா நகரின் ஓரமாக இருக்கும் Picnic Point, ஒரு சுற்றுலா நாளின் இறுதியை ஓய்வாக களிப்பதற்கு சிறப்பான இடம்.

துவும்பா நகருக்கான ஒரு சுற்றுலா சிறிவர் பெரியோர் என அனைவருக்குமே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. அழகியலை ரசிப்பவர்களும் இயற்கையை விரும்புபவர்களும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் வாழ்வில் சிறந்த தருணங்களை நாடுபவர்களும் தவறவிடக்கூடாத ஒரு நகரம், துவும்பா.

2 replies on “துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்”

காதலியுடன் சுத்துவதற்கும் , குழந்தை குட்டிகளுடன் (அதுகள் நுள்ளுப்பட, குத்துப்பட, ரென்சனுடன் கத்திக்கொண்டு இடம் சுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இதில மனிசி வேறை மோட்டல் ரூம் சரியில்லை என்று புறுபுறுக்க ….. (மோட்டல் ரூம் தேடிக் கண்டுபிடிச்சு நல்ல சீப் என்று விரைவாக புக் பண்ண வைத்தது அவளாகத்தான் இருக்கும்.)

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.