ஒரு PhD மாணவனான என்னிடம் பல சந்தர்ப்பங்களிலும் PhD பற்றி பல சந்தேகங்கள் கேட்கப்படும். இது அவ்வாறான அடிப்படையான சந்தேகங்களையும் PhD கல்வி தொடர்பான மேலதிக தகவல்களையும் தரும் ஒரு பதிவு இது.
PhD?
- ஆங்கிலத்தில் Doctor of Philosophy, லத்தின் மொழியில் Philosophiae Doctor, தமிழில் முனைவர்/கலாநிதி
- இது குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து பெறும் ஒரு உயர் கல்விப் பட்டம்.
- Doctor of Philosophy என்பதில் philosophy என்பது கிரேக்க மொழியில் ‘அறிவின் மீதான காதல்’, “love of wisdom” என்று அர்த்தப்படும்.
PhD என்றால் என்ன?
அடிப்படையில் PhD கல்வி ஒரு ஆராய்ச்சிக் கல்வி. ஆனால் இது நோபல் பரிசை வாங்கித்தரும் அளவுக்கான பெரியா ஆராய்ச்சியாக இருப்பதில்லை, (நோபல் பரிசு கிடைத்தாலும் தப்பில்லை). நீங்கள் உலகின் பெரும் ஆராய்ச்சியாளராகவும் ஆகப்போவதில்லை. சரியாக சொல்வதென்றால் PhD என்பது ஒருவருக்கு ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு சந்தர்ப்பம். PhD என்பது ஒருவகையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.
ஏன் PhD செய்ய வேண்டும்?
- பலரும் பல காரணங்களுக்காக PhD செய்வார்கள்.
- சிலருக்கு இது தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.
- சிலருக்கு தமது தொழிற்துறைசார்ந்த அறிவை வளரக்கும் ஒரு சந்தர்ப்பம்.
- சிலருக்கு தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் ஒரு வழி.
- ஏன் செய்யக்கூடாது என்று நினைக்கும் இன்னும் சிலர்,
என்னைப் போல, (ஒருவகையான வெட்டி பந்தாவுக்காகவும் செய்யலாம்).
ஒரு PhD கற்கை நெறியில் சேர என்ன தேவை?
- ஏதாவது ஒரு நோக்கம், அந்த நோக்கத்தை அடைவதற்கு நேரத்தையும் உழைப்பயும் கொடுக்க தயாராயிருத்தல்.
- இதை தவிர, பெரும்பாலும் ஒரு Masters degree அல்லது first class அல்லது second class, upper division உள்ள ஒரு Bachelors honors degree, அல்லது இவற்றுக்கு சமனாக கருதக்கூடிய வேறு தகமைகள் (துறைசார்ந்த வேலை அனுபவம் போன்றவை).
- ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக தொடரும் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருத்தல்.
- அது முன்னைய கல்விகளில் செய்த (சிறு) ஆராய்ச்சி செயற்திட்டங்கள் வாயிலாகவோ, வேறு வழிகளிலோ காட்டப்படலாம்.
எவ்வளவு பணம் செலவாகும்?
- பொதுவாக PhD மாணவர்களிடம் பாடநெறிக்கான கட்டணம் அறவிடப்படுவதில்லை. (மிகவும் குறைவு, நான் அறிந்து யாரும் இல்லை)
- ஏதாவது புலமைப்பரிசில் மூலமாக மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு கல்வி உதவித் தொகை வழங்கப்படலாம்.
- அல்லது மாணவர்கள் கற்பித்தல் உதவியாளர்களாகவோ (teaching assistants) ஆராய்ச்சி உதவியாள்ர்களாகவோ (research assistants) வேலை செய்யவும் முடியும்.
எவ்வளவு காலம் செலவாகும்?
- இது நாட்டுக்கு நாடு, கல்வி நிறுவனத்துக்கு நிறுவனம், துறைக்குத் துறை வேறுபடும்.
- குறைந்த பட்சம் 2 வருடங்களாகவும், பெரும்பாலும் 3 அல்லது 4 வருட்ங்களாகவும், பொதுவாக அதிக பட்சம் 6 வருடங்களாகவும் இருக்காலாம்.
- ஆனாலும் 10-12 வருடம் PhD செய்யும் சிலரையும் சந்தித்திருக்கிறேன்.
PhD முடிவில் என்ன?
- பொதுவாக ஒரு பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரை (ஆய்வேடு) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- இது சில சந்தர்ப்பங்களில் 100,000 அல்லது அதற்கும் அதிக சொற்களை கொண்டதாக இருக்கலாம்.
- பெரும்பாலான நாடுகளில் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
- இந்த தேர்வுகளில் சித்தி அடைந்தால், பொதுவாக உங்கள் பெயருக்கு முன்னால் 2 எழுத்துக்களும், பெயருக்கு பின்னால் 3 எழுத்துக்களையும் சேர்க்க முடியும்.
இது PhD தொடர்பான ஒரு அடிப்படையான அறிமுகம். உங்களுக்கும் PhD தொடர்பான சந்தேகங்கள் இருந்தலால் தெரியப்படுத்தவும், என்னால் இயலுமானவரை அவற்றுக்கான பதில்களை தர முயற்சிக்கிறேன்.
தேவை இருந்தால் மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திக்கலாம்…
எனக்கு இதில இந்தக் காணொளியில உன் நிறம்தான் பிடிச்சிருக்கு.. நல்ல exposure level. 🙂
நன்றி… அது editing ல் சரிக்கட்டியது…
நல்லதொரு விளக்கம்,மீண்டும் அதீத தன்னடக்கம்.. 🙂 வாழ்த்துக்கள்
நன்றி… நன்றி…
அரிய பல தகவல்களை அழகுற பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நிமல். உங்களின் தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். ரொம்ப பயனுள்ளதாய் தகவல்கள் அமைந்திருந்தது. மீண்டும் நன்றிகள் நிமல்.
காணொளி தொகுப்பு அழகாயிருக்கிறது. மெருகேற்றம் பெற்றிருக்கிறது. அழகு.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
This is a useful post indeed.
Regards,
Sam
Thank you…
nice post
தொலைதூரக்கல்வியில் M.A.(SOCIOLOGY) முடித்துள்ளேன். நான் Ph.D செய்ய முடியுமா?
ஒரு M.A. பட்டம் நீங்கள் Ph.D செய்ய போதுமான அடிப்படைத் தேவையாக இருக்கும். ஆனால் எனக்கு SOCIOLOGY துறை தொடர்பாக அனுபவம் இல்லை. நீங்கள் பல்கலைகழங்களை நேரடியாக அணுகுவதே சிறந்த ஆரம்பமாக இருக்க முடியும். பொதுவாக உங்களின் முனைய ஆராய்ச்சி அனுவங்களை மற்றும் வெளியீடுகள் இங்கு முக்கியமானவை.