பயணத் திகதி: நவம்பர் 23, 2010
நெல்சன் குடாவிலிருந்து 50கிமீ தெற்கே உள்ள நியூகாசில் (Newcastle), நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னிக்கு அடுத்த பெரிய நகரம். இது அவுஸ்திரேலியாவின் பழைய நகரங்களில் ஒன்றாக இருப்பதுடன் இன்றும் பழைமை மாறாத ஒரு நகரமாகவும் இருக்கிறது. இங்கு அதிகளவான பழைய கட்ட்டங்கள் இன்னமும் பாவனையில் இருப்பதுடன், புதிய உயர் மாடிக்கட்டங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. உலகிலேயே அதிக நிலக்கரி ஏற்றுமதி செய்யும் துறைமுகம் (Port of Newcastle) இங்கேயே அமைந்துள்ளது.
நாம் நியூகாசில் நகரத்துக்குள் பிரவேசிக்கும் போது பிப 2.45 ஆகியிருந்தது. சூரியன் இன்னமும் உச்சியில் எரிப்பது போல வெய்யிலின் கொடுமை அதிகமாகியிருந்தது. அங்கு விசேடமான திட்டம் எதுவும் இல்லததாலும், வெய்யிலால் அதிகமாகயிருந்த பயணக் களைப்பாலும் அதிக நேரம் செலவிடாமல் பயணத்தை தொடர முடிவுசெய்தோம். அங்கு கடற்கரை வீதியில் சில படங்களை எடுத்த பின்னர் 3 மணியளவில் சிட்னி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.




நியூகாசிலில் இருந்து சிட்னி 150கிமீ தெற்காக உள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ வேகத்தில் பயணிக்கலாம். ஆனாலும் நாம் பயணித்த நேரத்தில் அதிகளவான வாகனங்கள் பயணித்ததால் பல இடங்களில் 100கிமீ உட்பட்ட வேகத்திலேயே பயணிக்க முடிந்தது.


நாம் சிட்னி புறநகர் பகுதிகளை நெருங்கும் போது மாலை 5மணி ஆகியிருந்தது. அது ஒரு வேலை நாளாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருந்தது. அருணனை பெலா விஸ்டா பகுதியில் இறக்கிவிட்டு நான் வெஸ்ட் பெனன்ட ஹில்ஸ் வரும் போது மாலை 6மணி கடந்திருந்தது.
மூன்றாம் நாள் முடிவில் பயணித்திருந்த மொத்த தூரம் 1350கிமீ, மூன்றாம் நாள் மட்டும் பயணித்த தூரம் 548கிமீ.
அடுத்த பதிவில் ஜினோலன் குகைகளுக்குள் சென்ற அனுபவம்…