பயணத் திகதி: நவம்பர் 27, 2010
கடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர், 7ம் நாளான இன்று மெல்பேர்ன் நோக்கி எமது பயணத்தை மீள ஆரம்பித்தோம். அதிகாலை 5.30க்கே எழுத்து தயாராகி 6 மணியளவில் நாம் ஹியூம் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.
ஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway) சிட்னியையும் மெல்பேர்னையும் இணைக்கும் பிரதானமான அதிவேக நெடுஞ்சாலை. பெரும்பாலான இடங்களில் வெளியான சமதரைப் பிரதேசங்களுக்கூடாகவும் சில சிறு நகரங்களுக்கூடாகவும் செல்லும் இந்த பாதையில் அனேகமாக இடங்களில் 110கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அடுத்த 3 மணித்தியாலங்களுக்கு எங்கும் நிறுத்தாமல் பயணித்து 9 நெடுஞ்சாலை ஓர நிறுத்தம் ஒன்றில் மணியளவில் காலை உணவுக்காக நிறுத்தினோம். வழக்கமான காலை உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் தாமதித்து Gundagai நோக்கி பயணிக்கலானோம். வழியில் யாஸ் (Yass) என்ற நகருக்கு அண்மையில் ஒரு BP நிரப்பு நிலையத்தில் எமது வாகனத்துக்கும், அருகே இருந்த ஒரு KFC உணவக்கதில் எமக்கும் எரிபொருள் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரந்தோம்.

Gundagai நகருக்கு 8கிமீ முன்னதாக Snake Gully என்ற இடத்தில் சாப்பாட்டுப் பெட்டிக்கு மேல் இருக்கும் நாய் (Dog on the Tuckerbox) இந்த இந்த நெடுஞ்லையில் பிரபலமான ஒரு நிறுத்தமாக கருத்ப்படுகிறது. அந்த நாயையும் பார்த்துவிடலாம் என்று அங்கு நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்த பின்னர் ஆல்பெரி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.







வேகமாக பயணித்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை Holbrook என்ன நகருக்கூடாக செல்லும் போது வேகம் குறைந்தது. அங்கே இருந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்திலும் நிறுத்தி சில படங்களை எடுத்த பின்னர் மீண்டும் பழைய வேகத்தில் பயணம் தொடர்ந்தது.








பகல் உணவுக்காக ஆல்பெரி (Albury) நகரத்தில் நிறுத்திய பின்னர், அங்கிருந்த புகையிரத நிலையத்துக்கும் சென்று சில படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தொம்.




பகலுக்கு பின்னராக நாம் பயணித்த பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. சில இடங்களில் மெதுவான தூறலாகவும் மற்ற இடங்களில் பாதையை மறைக்கும் அளவுக்கு அதிகமான மழையாகவும் பெய்துகொண்டிருந்தது. மழை காரணமாக எமது வேகமும் சற்று குறைய வேண்டி இருந்தது. மாலை நெருங்கும் வேளையில் வழியில் இருந்த ஒரு McDonnalds உணவக்கதில் கோப்பி குடிக்க நிறுத்தினோம். இதன் பின்னர் அதிக நிறுத்தங்கள் இல்லாது எமது பயணம் தொடரந்து இரவு 8 மணியளவில் மெல்பேர்னில் உள்ள அருணனின் வீட்டை அடைந்தோம்.
இன்றய பயணம் 886கிமீ. ஏழு நாட்களில் பயணித்த மொத்த தூரம் 2685.9 கிமீ.
அடுத்த பதிவில் Great Ocean Road…
அழகான ஆரம்பம். படங்களைக் குறைத்து இன்னும் அதிகமாக எழுதினால், இன்னும் “அதிகமாக” ஜொலிப்பீர்கள்
அதுக்காக நான் புகைப்படங்களைக் குறை கூறுகின்றேன் என்று எடுக்கக் கூடாது. உங்களுக்குள்ளே ஒரு புகைப் படக் கலைஞனும் ஒளிந்து கொண்டுள்ளான்
நன்றி சக்திவேல்…