பயணத் திகதி: நவம்பர் 21, 2010
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்னுக்கு சென்ற road trip பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் நேரமின்மையால் அது சாத்தியமாவது போல் தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பயணத்தின் போது எடுத்த படங்களை ஒரு தொடராக இடுகிறேன். படங்களோடு ஆங்காங்கே எனது அனுபவங்களும் வரும்.
இது ஒரு குறுகிய காலத்தில் திட்டமிட்ட ஒரு நீண்ட பயணம். மூன்று மாநிலங்கள், பல நகரங்கள், பத்து நாட்கள் மற்றும் 3300 கிமீ நெடுஞ்சாலைப் பயணம் என்பதை ஒரு நீண்ட பயணம் என்று சொல்லலாம் தானே. மெல்பேர்ணில் இருக்கும் நண்பன் அருணன் விடுமுறைக்காக நவம்பரில் பிரிஸ்பேன் வருவதாக முடிவாகிய பொது அவன் திரும்பிச் செல்கையில் காரில் செல்லலாமொ என்ற எண்ணம் தோன்றியது. எனக்கும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை சாத்தியம் என்பதால் இந்த பயணத்தை நவம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டு கடைசி வாரத்தில் பயணம் சாத்தியமானது.
நவம்பர் 21, ஞாயிறு எமது பயணம் ஆரம்பமானது. காலை 10 மணிக்கு Hertzல் பதிவு செய்திருந்த Toyota Camry Altise வண்டியை எடுத்து, பாண் மற்றும் சில பொருட்களையும் வாங்கிய பின்னர், பசிபிக் நெடுஞ்சாலையில் பயணம் ஆரம்பமானது. எமது முதலாவது நிறுத்தம் பிரிஸ்பேனுக்கு தெற்காக 100கிமீல் உள்ள டுவீட் ஹெட்ஸ் முனை.






அடுத்த பதிவில் நிம்பின் கிராமத்தை பார்க்கலாம்…