நாட்குறிப்பு - மே 2001 - டுவீட்டர் இல்லாததால் டுவீட்டாதவை

நாட்குறிப்பு – மே 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது மே மாதம்.

நாட்குறிப்பில் என்னைப்பற்றி மட்டுமன்றி நண்பர்கள் பலரின் அந்நாளைய காதல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆனால் தேவையில்லாமல் பல குடும்பங்களுக்குள்/புதிய காதல்களுக்குள் குழப்பம் வேண்டாமே என்று அவற்றை பதிவிடவில்லை. 😉

மே 1:
இன்று எந்த வகுப்புக்கும் போகவில்லை.

மே 2:
இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். நாளை அவளிடம் கொடுக்க வேண்டும்.

மே 3:
இன்று ஆங்கில இலக்கிய வகுப்பின் பின்னர் அவளைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. விரைவில் அவளைச் சந்திக்க வேண்டும்.

மே 5:
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை சித்திர வகுப்பில் நண்பர்கள் வாசித்துவிட்டார்கள். மீண்டும் எழுதுகிறேன்.

மே 6:
இன்று காலை கணித வகுப்பில் அவளை பார்த்தேன். கவலை, கோபம், சோகம்.
அவள் கவியரங்கில் இருக்கலாம் என்று மாலை சித்திர வகுப்பு முடிந்து போனேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்திருந்தது.

மே 7:
அவள் இன்று கணித வகுப்புக்கு வரவில்லை. நான் இராம கிரிஷ்ண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்.

மே 8:
அவளுக்கு தொலைபேசினேன், ஆனால் யாரும் எடுக்கவில்லை.

மே 9:
நினைப்பதை விட மறப்பது கடினம்.

மே 10:
இன்று கதைக்கலாம் என்று நினைத்தேன், சந்தர்ப்பம் அமையவில்லை. எப்படியாவது விரைவில் கதைக்க வேண்டும்.

மே 11:
எம்மிடையே மேலும் பிரிவை விரும்பவில்லை என்று சொல்ல வேண்டும். இன்று தொலைபேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அழைப்பு எடுத்துவிட்டு எதுவும் கதைக்காமல் வைத்துவிட்டேன். கதைக்கவேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் பல சந்தர்ப்பங்களில் நினைத்த பல விடயங்கள் குரல்வளையை தாண்டி வருவதில்லை.

மே 12:
புதிய கண்ணாடி வாங்கினேன். பாடசாலையில் நாடக பட்டறை.

மே 13:
கணித வகுப்பில் அவளைக் காணவில்லை.

மே 14:
“உன்னை விரைவில் சந்தித்து கதைக்க வேண்டும்…”

மே 15:
அவளுக்கு கணித பரீட்சையில் குறைந்த புள்ளிகள், நானும் ஒரு காரணமோ?

மே 16:
இரண்டு வாரமாக அவளுடன் கதைக்கவும் முடியவில்லை, ஒரு கடிதம் கொடுக்கவும் முடியவல்லை.

மே 17:
அவள் ஒரு திங்கட்கிழமை பிறந்திருக்கிறாள். (கலண்டர் மென்பொருள்)

மே 18:
nimal_panai@hotmail.com
www.troyal.8m.net
www.troyal.org (1 year free from www.domainvilet.com)

மே 19:
என்னுடைய மடைத்தனத்தால் அவளை இழந்து கொண்டிருக்கிறேன்.
நினைப்பது எதுவும் நடப்பதில்லை, ஆனால் நினைக்காத பலதும் நடக்கின்றன.

மே 20:
கணித பரீட்சையில் அவளுக்கு 85, எனக்கு 98.

மே 21-24:
ஓரு கொடுக்காத கடிதமும், நானும், அவளும்.

மே 25:
இரவு 12 வரை பாடசாலையில் வேலை. அதிகாலை 2 மணிக்கு வீடு வந்தால் security கேற்றை திறக்கவில்லை. ஆதலால் நண்பர்கள் சிலருடன் நடைபாதையில் உறக்கம்.

மே 26:
பகல் பாடசாலை சென்று இரவு வந்தேன்.

மே 27:
கணித வகுப்பில் அவளைப் பார்த்தேன். எப்போது அவளை பார்த்தாலும் என்மீதே எனக்கு வெறுப்பாக உள்ளது. நான் அவளைக் காதலிக்கிறேன்.

மே 28:
என் கண்களிலும் நினைவுகளிலும் நீதான் இருக்கிறாய்.

மே 29:
அவள் தமிழ் வகுப்புக்கும் வரவில்லை, கணித வகுப்புக்கும் வரவில்லை.

மே 30:
என்னால் செய்ய முடிவதெல்லாம் என்னை நானே வெறுப்பது மட்டுமே. குறைந்தது நான் அவளை விரும்பிகிறேன் என்பதை கூட நான் சொல்வதில்லை. நான் செய்யும் மடைத்தனமான வேலைகளுக்கு அவள் என்னை விரும்புவாள் என்று நான் எதிர்பார்ப்பது அதிலும் பெரிய மடைத்தனம்.

மே 31:
இந்த மாதம் எல்லாவிதத்திலும் தேவையில்லாத விடயங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன.

(தொடரும்…)

(Post image plagiarized from Jennifer Donley)

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

2 thoughts on “நாட்குறிப்பு – மே 2001”

  1. ‘அந்த’ அழகிய மாறாத சுவையுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருப்பது வாசிக்க இனிமையைத் தருகின்றது. இந்த நிகழ்வுகளின் ஈற்றில் எஞ்சியுள்ள உணர்வுகள் கசப்பாக இருந்தபோதிலும், பின்னாளில் அவை நினைவுகளிற்கு உத்வேகம் தருவது கவிதை. மற்றவர்களிடம் நாம் எல்லையற்ற அன்பைச் செலுத்தும் நிலையில், அதற்கான பதில் கிடைக்காமல் போகும் போது, மற்றவர்களுக்கு அன்பைச் செலுத்துவதில் பாண்டித்தியம் பெற்ற நாம், எம்மீது அன்பு செலுத்துவதில் கோட்டை விடுவது நடந்தேவிடுகிறது. தவிர்க்கமுடியாத ஒரு சம்பவம் சார்பான விதி போலவே அதை என்னால் பார்க்க முடிகிறது.

    இனிச் சொல்லப் போவது, ஒரு ரசிகனின் ஆசையாகக்கூட இருக்கலாம். இறந்த காலத்தின் நிகழ்வுகளை எதிர்வு கூறுவது சாத்தியமில்லை பொருத்தமில்லாததுதான். ஆனாலும், அவள் அடுத்துவரும் மாதங்களிலும் வர வேண்டும். வெறுப்புக்கு விருப்பு சேர்க்க வேண்டும். கவலைகளை ஆனந்தமாக பரிவர்த்தனை செய்ய வேண்டும். எல்லாம் இனிதே நிறைவேற வேண்டும்.

    //நினைப்பதை விட மறப்பது கடினம்.// நச். முதன்மைப் படமும் அழகாய் இருக்கிறது.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

    1. தொடர்ந்த வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
      இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் எதிர்வு கூறுவது கடினம் தான். இன்னும் 2 அல்லது 3 பதிவுகள் மட்டுமே.

      நன்றி,
      நிமல்.

கருத்துக்கள் மூடப்பட்டது