நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது மார்ச் மாதம்.
மார்ச் 1:
இன்று றோயல்-தோமியன் வருடாந்த துடுப்பாட்ட போட்டி ஆரம்பமாகியது. பகல் வரை மைதானத்தில் இருந்தேன்.
மார்ச் 2:
தனுஷியனின் வீட்டில் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படம் பார்த்தோம். ‘Gun பேசினால்’ புத்தகம் வாசித்து முடித்தேன்.
மார்ச் 9:
{பக்கம் கிழிக்கப்பட்டுள்ளது}
மார்ச் 10:
இன்று சித்திரவகுப்பில் செய்த pencil shading நன்றாக வந்துள்ளது. ஒரு இலக்கம் 0 தூரிகை வாங்க வேண்டும்.
மார்ச் 12:
{பக்கம் கிழிக்கப்பட்டுள்ளது}
மார்ச் 13:
{…} நான் குழம்பியதை யார் காதல் கனவு என்று நினைக்கச் சொன்னது? நீங்களும் உங்கட {…}!!!
மார்ச் 14:
பார்கப் போய்விட்டு வரும்போது அவனைப் பார்த்தேன்… S…!
மார்ச் 15:
மாலை 5 மணியளவில் பல தடவைகள் தொலைபேசினாலும் விஜிராம் இருந்ததால் கதைக்கவில்லை.
மார்ச் 16:
பாடசாலையில் இன்று விளையாட்டுப் போட்டி. பொது நூலகத்தில் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’, ‘வீரபாண்டியன் மனைவி’ புத்தகங்கள் எடுத்தேன். இன்று மாலையும் பல தொலைபேசி அழைப்புக்கள், இன்றும் விஜிராம் இருந்ததால் கதைக்கவில்லை. Why… My bad…!
மார்ச் 17:
இன்று சித்திரம், ஆங்கில இலக்கியம், சமூக கல்வி, தமிழ் வகுப்புக்கள்.
மார்ச் 18:
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும்.
மார்ச் 19:
இன்றைய வகுப்பில் நானும் சிந்துஜனும் copy அடித்ததாக குற்றச்சாட்டு. உண்மையா copy அடிக்கிற நாளில விட்டிட்டு, copy அடிக்காத நாளில பிடிச்சா என்ன செய்ய. 🙂
மார்ச் 20:
அடேய் நண்பா, உனக்கேன் தேவையில்லாத வேலை.
மார்ச் 22:
இன்று ஆங்கில இலக்கிய வகுப்பில் அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வகுப்பு முடிந்த பின் பார்த்தேன்.
மார்ச் 24:
சிலேவ் ஐலண்ட் காகம் ஒன்றுக்கு மரண அறிவித்தல் ஒட்டியிருந்தது.
மார்ச் 25:
இரவு 10:30 அளவில் தொலைபேசி என்னோடு நிறைய கதைக்க வேண்டும் என சொன்னாள். விரைவில் நேரடியாக சந்தித்து கதைக்க வேண்டும்.
மார்ச் 27:
கணித வகுப்பு பரீட்சையில் அவளுக்கு 87, எனக்கு 90.
மார்ச் 29:
நான் அவளை காதலிப்பதாக ஹரேஷிடம் கூறினேன். ஆனால் மற்றவர்களிடம் இல்லை என்று கூறிவிட்டேன். ஏன்?
மார்ச் 30:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 1 வாசித்து முடித்து பாகம் 2 எடுத்துவந்தேன். ‘இந்திரகுமாரி’, ‘துறவு’ புத்தகங்களும் எடுத்தேன்.
(தொடரும்…)
(Post image plagiarized from Paul Watson)
சூப்பரு நிமல்… என்னை உங்கள் நினைவுகளோடு பயணிப்பதாய் உணர்ந்து கொண்டேன். சிலேவ் ஐலண்ட் காகத்தின் மரண அறிவித்தல், ட்விட்டர் இருந்திருந்தால், Twitpic ஆக வந்திருக்கும் என்ற தேட்டம் எனக்கிப்போது உள்ளது. அவளை எனக்குத் தெரியாது. ஆனால், அவனை எனக்குத் தெரியும். தொடர்ந்து கலங்குங்க..
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
தொழில்நுட்பமும் காலமாற்றமும் எவ்வளவு புதிய சாத்தியங்களை தருகின்றன. ஆனாலும் அன்று கையால் எழுதிய டயறியை 10 வருடங்களின் பின் பார்ப்பதும், இப்போது டுவிட்டும் டுவீட்டுக்களை 10 வருடங்களின் பின் பார்ப்பதும் வித்தியாமாகவே இருக்கும்.
வருகைக்கு நன்றி,
நிமல்
அடப்பாவி!.
டேய் கொஞ்சம் வெளிய இருடா எண்டு கலைச்சு விட்டிருக்கலாம் அல்ல.
என்ன சார் செய்ய… அந்த காலத்தில நான் ரொம்பவே அப்பாவியா இருந்திருக்கிறனோ… 🙂
நான் தான் அப்பாவியா இருந்திருக்கன்
situation a புரிஞ்சு வெளிய போய் இருக்கணும் 🙂
dai nanba!!!
March 29…. now you are askin why or have you done it on that day itself ???
I had the “why” on that day it self…
Enna copy adicham??? niraya copy pannathala ninaivil illa.
yaa… 🙂
ராம் கடைசில உண்ட தலைல எல்லாம் வந்து பொறிதே. ஆனால் காரணம் தேடுபவர்கள் முட்டாள்கள் என்பது தெளிவாக புரிகிறது.
நிமல் நாட்குறிப்பு சுவையாக உள்ளது. But உண்ட சோகத்தை எப்பிடிடா உனக்கு இவ்வளவு சுவையா சொல்ல முடிது…
Sindu aapudi unaku…
சோகம் எல்லாம் அப்பதான் சார்… இப்ப அதெல்லாம் ஒரு அனுபவம்…
athuvum sari…..ipa ellam fun thaan……………