நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஜூன் மாதம்.

ஜூன் 1:
மகாவலி நிலையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கும் பின்னர் நூலகத்திற்கும் சென்றேன்.

ஜூன் 2:
ஒரு சில உண்மைகள் உண்மைகளா பொய்களா?

ஜூன் 3:
காலை 10 மணியளவில் தொலைபேசி மாலை சந்திக்க வேண்டும் என்றாள். மாலை 4.30க்கு சந்தித்து கடிதங்கள் பரிமாறினோம்.

ஜூன் 4:
இரவு 10.30க்கு தொலைபேசினாள். மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை, நான் ஏதோ செய்ய வேண்டும் என்றாள். குழப்பமாக இருக்கிறது.

ஜூன் 5:
மாலையிலிருந்து இரவு வரை தொலைபேச முயற்சித்தாள். அம்மா இருந்ததால் கதைக்கவில்லை.

ஜூன் 6:
கெட்ட நாள். ‘காதல் கவிதை’ படம் பார்த்தேன்.

ஜூன் 7:
நண்பர்கள் எல்லாம் நண்பர்களாக இல்லை.
மாலை 5.30க்கு தொலைபேசி எதிர்காலத்தைப்பற்றி நீண்ட நேரம் கதைத்தாள்.

ஜூன் 8:
பாடசாலையில் கண்காட்சி.

ஜூன் 12:
நண்பர்கள் என்று சொல்பவர்களில் பலர் ஒருவகையில் துரோகிகளாகவும் இருக்கிறார்கள்.

ஜூன் 13:
அவன் செய்ததை மன்னிக்கமுடியாது. அவனுக்கும் நடந்தால் தான் விளங்கும்.
அவளிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜூன் 17:
அவனைப்பற்றி இனியும் எழுத விரும்பவில்லை.

ஜூன் 18:
காய்ச்சலும் தடிமலும்.

ஜூன் 19:
கணிதப் பரீட்சை. 51, 32.

ஜூன் 20:
கருத்துக்கள் நினைப்பதை விட வேகமாக மாறுகின்றன.

ஜூன் 21:
அவளின் நண்பி ஒருத்தி தொலைபேசினாள். அம்மா இருத்ததால் சரியாக பேச முடியவில்லை.
{சில நண்பர்களைப்பற்றி இன்னும் சில}

ஜூன் 22:
இப்போது உன்னுடன் கதைப்பது குறைவு, கதைப்பதில்லை என்பதே சரி. இப்போது தான் உன்னை அதிகமாக நினைக்கிறேன். ஆனாலும் ஏன் கதைக்காமல் இருக்க விரும்புகிறேன்?

ஜூன் 23:
ஆங்கில இலக்கிய வகுப்பு.

ஜூன் 24:
அவள் கணித வகுப்புக்கு வரவில்லை. வேறு குழுவுக்கு மாறிவிட்டாள்.

ஜூன் 25:
மாலை தொலைபேசி என்னை இரவு தொலைபேசச் சொன்னாள். நான் இரவு 9.30க்கு தொலைபேச எடுத்து எதுவும் பேசாமல் வைத்துவிட்டாள். பிறகு 10மணியிலிருந்து தொலைபேச முயற்சிக்கிறாள். ஆனால் இப்போது என்னால் பேசமுடியாது.

ஜூன் 27:
செய்யவேண்டியதை அவ்வப்போது செய்யாவிட்டால் பின்னர் செய்வது கடினம்.

ஜூன் 30:
இனி நான் என் நாட்குறிப்பை எழுத மறக்கலாம், ஆனால் உன்னை…

(தொடரும்…)

(Post image plagiarized from Neto Gonzalez)

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

7 replies on “நாட்குறிப்பு – ஜூன் 2001”

  1. Nalla kaalamda saami… Eppidi oru vathaya naan antha vayasila anupavichu erntha ennahi eruppanoo… Good nimalee… Love just a waste of time man…

    படித்ததில் பிடித்தது…

    டைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா? எப்பவுமே பொண்ணுங்க உசாரு, எஸ்கேப்பாயிடுறாங்க.

    நீ தப்பிசிட்டைட மச்சி… அதுவே எங்களுக்கு (not in துரோகி category) friendsku போதும்…

    1. என்ட கதையில யார் உசார், யார் எஸ்கேப் எல்லாம் கொஞ்சம் வித்தியாசம் தான்…!

      “Love just a waste of time” எண்டு நீங்களா சொல்றது… 😉

  2. ம்ம்ம்…..

    இப்போது அந்த இரு தொலைபேசிகளும் தங்கள் கதை சொல்ல வேண்டுமென என் மனம் ஆசைப்படுகின்றது.

    Dhilee, சிவ பூசைக்குள் கரடியா? 😀
    உங்களின் பின்னூட்டம் இந்நாட்குறிப்புகளின் இறுதி அத்தியாயமாக…???

    ஆனாலும், தொடர்ந்து நாட்குறிப்புக்களை வாசிக்க ஆர்வத்துடன்…

Comments are closed.