எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பெரிதாக இருந்ததில்லை. நான்கு வருடங்கள் (1999-2002) ஏதோ எழுதியிருக்கிறேன். அதில் அதிகமாக எழுதிய வருடம் 2001. அந்த நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த அனேக பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். அந்த காலத்தில் Twitter இருந்திருந்தால் டுவீட்டியிருக்க வேண்டியவை… 😉

ஜனவரி 10:
கடல்புறா (பாகம் 2) வாசித்து முடித்துவிட்டேன்.

ஜனவரி 13:
கடந்த மூன்று நாட்களாக எனது ஓவியங்கள் காட்சிப்படுத்திய ஒரு ஓவிய கண்காட்சியில் கலந்துகொண்டேன்.

ஜனவரி 15:
இன்று காலை கோவிலுக்கு போனேன்.

ஜனவரி 20:
சாரணர் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

ஜனவரி 21:
கணித பரீட்சையில் 100 புள்ளிகள்.

ஜனவரி 22:
Macromedia Flash பயன்படுத்தி ஒரு அசைபடம் உருவாக்கியிருக்கிறேன், நன்றாகத்தான் இருக்கிறது. பண்டாரவன்னியன் புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன்.

ஜனவரி 23:
இன்று ‘நாம்’ இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக தோன்றுகிறது, ஏனென்று தெரியவில்லை. நாளை மாலை 5 மணிக்கு சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன்.

ஜனவரி 24:
அந்த கடிதம் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம்.

ஜனவரி 25:
Windows Movie Makerல் ஒரு அசைபடம் உருவாக்கினேன்.

ஜனவரி 26:
புதிய மின்னஞ்சல் முகவரி nimal-ana@newmail.com. ஒவ்வொரு வெள்ளியும் மின்னஞ்சல் பார்க்க வேண்டும்.

ஜனவரி 27:
கடல்புறா (பாகம் 1) வாசித்து முடித்தேன்.

ஜனவரி 28:
இன்று ‘நாம்’ இருவரும் குழப்பத்துடனும் கவலையுடனும் இருந்ததாக தோன்றுகிறது.

ஜனவரி 29:
இலவசமாக இணைய பக்கங்களை 8m.com என்ற தளத்தில் உருவாக்கலாம் என்று விஜிராம் மூலமாக தெரிந்துகொண்டேன். ஏதாவது செய்ய வேண்டும்.

ஜனவரி 30:
‘உலகம் ஒரு அகதி முகாம்’ என்ற தலைப்பில் ஒரு நீ…..ண்ட கட்டுரை எழுதினேன். என்னுடைய எழுத்து எனக்கே திருப்ப வாசிக்க கடினமாக இருந்தது.

ஜனவரி 31:
troyalist என்று ஒரு இணைய பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்…)

(Post image plagiarized from Jens Kuehnemann)

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

4 replies on “நாட்குறிப்பு – ஜனவரி 2001”

 1. "ட்வீட்டர் இல்லாததால் டிவிட்டாதவை" என்ற வரிகள் அழகு. சின்னச் சின்ன விடயங்களாக இருந்த போது, பெரியதோர் கதையொன்று அங்கு விரிவதாக உணர்கிறேன். "நாம்" என்பதில், இருக்கும் அடுத்த element, என் விடயம் போல், அஃறிணையாக இருக்காது (http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/) என்று நம்புகிறேன். 😛 2001ஆம் ஆண்டின் என் நினைவுகளை உங்கள் பதிவு உசுப்பிவிட்டதாய் உணர்கிறேன். "இன்னொரு பிரபஞ்சம்" தொடரும் தூசுதட்டப்பட்டு தொடரப்பட வேண்டும் என்பதைச் சொல்லுவதாய் அந்த உணர்வு இருந்தது. நன்றி நிமல். தொடர்ந்து சொல்ல மறக்காத ட்வீட்டுகளை அறியும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அசத்துங்க.. 🙂

  இனிய புன்னகையுடன்,

  உதய தாரகை

  1. உண்மைதான்… பழைய டயரிகளை புரட்டிப் பார்ப்பதும் பழைய நினைவுகளை உருட்டிப் பார்ப்பதும் வித்தியாசமான ஒரு உணர்வு. உங்களுளைய “இன்னொரு பிரபஞ்சம்” தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   “நாம்” தொடர்பான ஏனைய பதிவுகள் 😉

   நன்றி,
   நிமல்

 2. இன்று தான் நீங்கள் ஓவியம் கூட வரைவீங்கள் என்று தெரிந்து கொண்டேன். பலவித திறமைகள் கொண்டவர்கள் மிக குறைவு. அதில் நீங்களும் ஒருவர் 🙂 . தொழிநுட்ப பயணத்துடன் கலைப் பயணமும் தொடர வாழ்த்துக்கள்.

Comments are closed.