இன்று காலை வேலைகளுக்கு மத்தியில் வெட்டியாக இருந்த வேளை, மூஞ்சிப்புத்தகத்தில் இந்த குறுப்படத்தை பார்க்க கிடைத்தது.
மூன்று வருட பிரிவின் பின்னர் சந்திக்கும் காதலர்கள், நாம் அன்றாடம்(?) காணும் ஒரு கதையாக இருந்தாலும் திரைக்கதையும் சொல்லப்பட்ட விதமும் சிறப்பானவை. இந்த குறுப்படம் எந்த வெட்டல்கள் ஒட்டல்கள் (editing) இல்லாமல் ஒரே காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது. கதையோடு இணைந்து வரும் அந்த பாடல் உணர்வுகளோடு அழகாக பொருந்துகிறது. வசன ஒலிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்காலம். இதில் நடித்திருக்கும் Adit Arun மற்றும் Regina Cesandra ஏற்கனவே M. பாலாஜியின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறுப்படத்தில் நடித்தவர்கள். வேறு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிறப்பான நடிப்பு.
புதிய இயக்குனர் Ramya Ananthe Kalingarayar, ஒளிப்பதிவாளர் Sai Kumar மற்றும் L.V.Prasad Film & TV Academy மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பான ஒரு அழகிய குறுந்திரைப்படம் – கானல் நீர்.
அண்மைக் காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் பல குறுந்திரைப்படங்கள், உணர்வுகளை உசுப்பிவிடுகின்ற அல்லது அழகாக உணர்வுகளுக்கு பதியம் போடுகின்றதாய் அமைந்துவிடுவதை அவதானிக்க முடிகிறது. குறித்த நடிகர் நடித்து வெளிவந்த “மிட்டாய் வீடு” (http://www.youtube.com/watch?v=s4xViru8_Jo) என்ற குறுந்திரைப்படமும் முக்கியமானது.
இந்தக் குறுந்திரைப்படத்தில் வெறும் ஒரு கமராவின் மூலம், தொடர்ச்சியான காட்சிக் கோணங்கள் மாறி மாறி வந்தது கவிதை என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஆங்கில குறுந்திரைப்படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். http://www.youtube.com/watch?v=ZHsxlTCVlj4
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
உண்மைதான்… குறுந்திரைப்படங்களின் வலிமை இப்போதுதான் தமிழில் அறியப்படுகிறது. எனக்கும் “மிட்டாய் வீடு” பிடித்தமானது. பகிரவுக்கு நன்றி.
இந்த படம் மிகவும் அருமையானது .குறிப்பாக இதில் வரும் ஒரே ஒரு வசனம்
“அவ கண்ணு அப்படியே உன்ன மாதிரி ” இந்த வரியில் ஆடிப்போய் விட்டேன்