அனைவருக்கும் வணக்கம்,
கொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்
எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் (Leo Club of Colombo Circle) கல்வி, சிறுவர் நலன், முதியோர் நலன் சாரந்த பல சமூக சேவை செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே முக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்பாக உள்ளபோதும், இளைஞர்களாகிய எம்மால் பெரும் செயற்திட்டங்களுக்குரிய நிதியை திரட்டமுடிவதில்லை.
இதனால் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் எதிர்கால சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த தைப்பொங்கல் தினத்தன்று ஒரு திரைப்பட காட்சியை குத்தகைக்கு எடுத்து, அந்த காட்சியின் வருமானத்தை கழக செயற்பாடுகளுக்கு பயன்படுத்த இருக்கிறோம். அதற்கு உங்களிடமிருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய நாட்டுசூழலுக்கும் பலரின் மனநிலைக்கும் பொருத்தமில்லாத ஒரு வேண்டுகோளாக இது இருந்தாலும், உங்களின் சுயவிருப்பின் பேரில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காட்சியிடல் விபரங்கள்:
- திகதி: 14/01/2009 (தைப்பொங்கல் விடுமுறை)
- நேரம்: காலை 10.30
- இடம்: பிரீமியர் கொன்கோட் திரையரங்கு, தெகிவளை
- திரைப்படம்: வில்லு
- நுழைவுச்சீட்டு கட்டணம்: ரூ 400 (பல்கனி), ரூ 320 (ஓ.டி.சி.)
நுழைவுச்சீட்டுக்கள் பெற:
- CD World, Wellawatte
- Leo Mirunan – 077 6672043
- Leo Mayuran- 077 2097240
- Leo Thusy – 077 5024666
- என்னிடமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நுழைவுச்சீட்டுக்கள் உள்ளன, வேண்டுவோர் 078 5301949 இல் என்னை தொடர்புகொள்ளவும்.
குறிப்புக்கள்:
கொழும்பிலுள்ள பதிவர்கள் வர இயலுமாயின் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஒரு எண்ணமும் உள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள், கேள்விகள் இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளலாம். (nimalaprakasan அற் gmailடெட்com)- இந்த தகவலை தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் எமது கழகத்தின் சமூக சேவை செயற்பாடுகள் பங்களிப்பை நல்குங்கள்.
பிற்சேர்க்கை (12-01-2009):
காட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.
பல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற்று gmail.com) தொடர்புகொள்ளவும்.
நுழைவுச்சீட்டுக்கள் ‘CD World, Wellawatta’ மற்றும் ‘Hotel Rolex Wellawatta’ ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.
அன்புடன்,
Leo நிமல்
Past Secretary – 2006/2007 – Leo Club of Colombo Circle
District Council Coordinator – 2008/2009 – Leo District Council 306B2
Tags: Colombo, Leo, Movie, Villu, Vijay, Social Service
good idiavijay's movie is for helpe to tamil naaduthanks
me the second???good idea keep it up
ஈழத்தமிழர்கள் விஜய் படத்தைப் பார்த்து குப்பியடிக்காமல் இருக்கனுமேஆண்டவரே இந்த அப்பாவிகளை காப்பாற்றவும்
வில்லு, விஜய், மற்றும் பலவற்றையும் தாண்டி இதனால் திரட்டப்படும் நிதி நல்ல பல செயற்பாடுகளுக்கு பயன்படும் என்பதே முக்கியமானது.
விஜய் படம் நல்ல காரியத்துக்கு பயன்படறது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தான்…
ஆமாம் .. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.. 🙂
பிற்சேர்க்கை (12-01-2009):காட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.பல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற் gmail.com) தொடர்புகொள்ளவும்.நுழைவுச்சீட்டுக்கள் 'CD World, Wellawatta' மற்றும் 'Hotel Rolex Wellawatta' ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.
அனைவருக்கும் நன்றி….அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் விற்றுத்தீர்ந்துவிட்டன…