புத்தியுள்ள மனிதரெல்லாம் – சந்திர பாபு

சந்திரபாபு

சந்திரபாபு தமிழ் திரைத்துறையின் ஒரு பன்முக கலைஞன். ஒரு நகைச்சுவை நடிகன் என்ற பரிமாணத்துக்கு அப்பாற்பட்டு இன்னும் பல திறமைகளை தன்னுள் கொண்டிருந்த ஒரு திறமைசாலி. முக்கியமாக சந்திர பாபு பாடியுள்ள பாடல்கள் சிறப்பானவை. அவற்றின் இசை மற்றும் இதர விடையங்களை காட்டிலும் முக்கியத்துவம் பெறுவது, கருத்தாளம் மிக்க வரிகளும் சந்திர பாபுவின் குரலுமே.

எனக்கு பிடித்த சந்திர பாபு பாடல்களில் முதன்மையானது ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’. அந்த பாடல் வரிகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

பாடல் வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : சந்திரபாபு

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்
அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் மனதில் யார் வருவார்
யாரை பார்த்து அழைப்பாள்?

—-
Song : Puthiyulla Manitharellaam
Singer : J. P. Chandrababu
Lyrics : Kannadasan

Puthiyulla Manitharellaam
Vetri Kanbathillai
Vetri Petra manitharellaam
Buthisaaliyillai

Panamirukkum Manitharidam
Manamiruppathillai
Manamirukkum Manitharidam
panamiruppathillai
Panam Padaitha Veettiniley
Vanthathellaam Sontham
Panamillaatha Manitharukku
Sonthamellam Thunbam

paruvam Vantha Anaivarumey
Kathal Kolvathillai
Kathal Konda Anaivarumey
Manam Mudipathillai
Manam Muditha Anaivarumey
Sernthu Vaazhvathillai
Sernthu Vaazhum Anaivarumey
Sernthu Povathillai

Kanavu Kaanum Manithanukku
Ninaippathellaaam Kanavu-
Avan Kaanukinra Kanaviniley
Varuvathellaam Uravu
Avan Kanavil Aval varuvaal
Avalai Paarthu Sirippaal
Avan Manathil Yaar Varuvaar
Yarai Paarthu Azhaippaal?

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

3 replies on “புத்தியுள்ள மனிதரெல்லாம் – சந்திர பாபு”

  1. சந்திரபாபுவின் குரலே அவரை மக்களிடம் பிரபல்யம் அடைய செய்தது.கண்ணதாசனின் வரிகள் வக்ஷமை போலவே அற்புதம்![நிம்மி! இந்த பாட்டை பெங்களூரில் கேட்டோமே! ஞாபகமா? 🙂 BOLDபண்ணிய வரி உங்களை ரொம்ப பாதிச்சிட்டு போல! hee hee hee]

Comments are closed.