
பிரபல புதிய பதிவர் பக்திவேல் பிரபல மூத்த பதிவர்களால் கட்டம் கட்டப்பட்டு பதிவுலகை விட்டு வெளியேறவைக்கப்பட்டதை கண்டித்து புதிதாக ஆரப்பிக்கப்பட இருந்த திரட்டி வழங்கி திட்டமான “திரட்டிஸ்பொட்” திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய பதிவரும், வலையுலக புரட்சியாளரும், துப்புதுலக்கி எழுத்தாளருமாகிய (investigative journalist) மதிப்புக்குரிய பக்திவேல் “பிடிக்காத புத்தகங்கள்” என்ற பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவை எழுதி வந்தது, வலையுலகம் முழுதும் அறிந்த்தே. அண்ணலின் அதீத வளர்ச்சி பொறுக்கா கயவர்கள் தமது எழுத்தால் அண்ணலை எதிர்கொள்ள தீரமற்று பின்னூட்ட கயமைத்தனத்தை பயன்படுத்தி அண்மைக்காலமாக தாக்குதல் நடத்திவந்தனர். மூத்த பதிவர்கள் என்ற முகமூடிக்குள் மறைந்து இந்த நயவஞ்சக நாடகத்தை நடத்திய கபோதிகளின் நடவடிக்கை பொறுக்காமல் அண்ணல் பக்திவேல் பதிவுலகைவிட்டு தான் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
அண்ணல் பக்திவேலின் விலகலானது, பதிவுலகிற்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்குமே பேரிழப்பாகும். இத்த செய்திகேட்டு எம் கண்கள் பனித்தன, வயிறு புளித்தது, இதயம் இடித்தது. திரட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துகோலாக இருந்த பக்திவேல் இல்லாத ஒரு வலையுயக சூழலில் “திரட்டிஸ்பொட்” போன்ற திரட்டி வழங்கி பயனற்றது என நாம் கருதுவதால் இந்த திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது.
நன்றி.
திரட்டிஸ்பொட் – (எதிர்கால) நிர்வாகம்
🙂
பதிவு என்பதே கருத்துச் சுதந்திரத்திற்கான முன்னோடி என அடையாளங் காணப்படும் இக்காலத்தினிலே – இத்தகைய ஈனத்தனமான செயல்களினால் அதனைச் சவாலுக்குட்படுத்திவிட்ட ஈனர்கள் வைரஸ்களுக்கொப்பானவர்களேயன்றி வேறில்லை.
@என்.கே.அஷோக்பரன்::)
//அண்ணல் பக்திவேலின் விலகலானது, பதிவுலகிற்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்குமே பேரிழப்பாகும். இத்த செய்திகேட்டு எம் கண்கள் பனித்தன, வயிறு புளித்தது, இதயம் இடித்தது. திரட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துகோலாக இருந்த பக்திவேல் இல்லாத ஒரு வலையுயக சூழலில் "திரட்டிஸ்பொட்" போன்ற திரட்டி வழங்கி பயனற்றது என நாம் கருதுவதால் இந்த திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளதுஎன்ன இது.. இதுவரை அரசியல் வாதிங்கதான் அறிக்கைவிடுவதும் பின் ஏதாவது காரணம் கிடைத்தால் அதனைச் சாட்டாக வைத்து தப்பிப்துமாக இருந்தார்கள்.. அந்தக் கலாச்சாரம் இப்போ பதிவுலகிலுமா.. ????