நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0
நீ என்னை காதலிக்கிறாய்.
நானும் உன்னை காதலிக்கிறேன்.
[ஒரு வருடம்]

1
நான் உன்னை காதலிக்கவில்லை.
நீ என்னை காதலிக்கிறாய்.
[நான்கு வருடங்கள்]

5
நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய்.
நான் உன்னை காதலிக்கலாம்…(?)
நான் உன்னை காதலிக்கிறேன்.
[இரண்டு வருடங்கள்]

7
நான் உன்னை காதலிக்கிறேன்.
இன்னொருவன் உன்னை காதலிக்கிறான்.
நீ …?
நான் உன்னை காதலிக்கிறேன்.
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
[ஒரு வருடம்]

8
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
நான் …?
[ஒரு வருடம்]

9
நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.
நீ இதை வாசிக்கலாம்…(?)

அன்புடன்,
நிமல்

பி.கு.:

  1. இது கதையோ, கவிதையோ அல்ல.
  2. இது முற்று முழுதான ‘கற்பனை’.

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

7 thoughts on “நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை”

  1. நீங்கள் கணிதம் படித்த ஒருத்தன் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. :-)ஆக, 9 வருடங்களாக முற்று முழுதான கற்பனைக் காதலில்…. (வசனத்தை எப்படி முடிப்பது?)இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

  2. // 9நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.நீ இதை வாசிக்கலாம்…(?)வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்… // 1நான் உன்னை காதலிக்கவில்லை.நீ என்னை காதலிக்கிறாய்.[நான்கு வருடங்கள்]இதனை முதல் நான்கு வருடங்களில் செய்திருந்தால் இந்த வலைவிடு தூது தேவைப்பட்டு இருக்காது என்று எனக்குத் தோன்றுகின்றது நிமல்.. 🙂

  3. @சுபானு: அனுதாபங்கள் என்று வந்திருக்க வேண்டும், வாழ்த்துக்கள் என்று அல்ல.இது தூதுவும் இல்லை, நான் சாதுவும் இல்லை (rhyming)…!//வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்… //உண்மையில் இது நான் எழுத இருக்கும் ஒரு குறுந்தொடருக்கான Outline மட்டுமே…!ஒரு conspiracy உருவாக்குவதற்கான என்னையும் சம்பந்தப்படுத்துவது போல் எழுதப்பட்டுள்ளது.அவ்வளவே…!

கருத்துக்கள் மூடப்பட்டது