இணையத்தில் திண்ணைப் பேச்சு

கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்….

ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை…

நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து கொள்ள இவர்களை பின்தொடருங்கள்…

திண்ணை 1:

 • எமது அண்ணர் லோஷன்
 • சுபானு(“I’m very busy with office work…No time for other work…”)
 • ஆதிரை
 • புல்லட் – இவரும் இந்த திண்ணையா….? (சின்ன டவுட்டு)

(இது ஒரு இலங்கை திண்ணை, இன்னும் பலர் பரபர டுவீட்டர்களும் இங்கு உண்டு…!)

திண்ணை 2:

(இது ஒரு அரசியல் திண்ணை)

திண்ணை 3:

பரபர எழுத்தாளர் பா.ரா தலை(மை)யில் இயங்கும் வெண்பாம் இயக்கம். @nchokkan, @snapjudge, @icarusprakash, @gchandra, @elavasam இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள், பரபர பதிவர்கள், முன்னாள் பிரபல பதிவர்களும் இந்த திண்ணையில் அடக்கம்.

இவை போல இன்னும் எண்ணற்ற பல திண்ணைகள் இந்த டுவீட்டரில் இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிப் பார்க்கலாம். அதுவரை நீங்களும் இந்த திண்ணைகளில் பொழுது போக்கலாம்….!

பி.கு:

 1. இது ஒரு நகைச்சுவைப் பதிவு அல்ல, கடும் சீரியஸ் பதிவு ஆகும்.
 2. இது யார் மனதையும் பண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல.
 3. இந்த திண்ணைகள் குறித்த இந்த விளம்பர பதிவிற்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படவில்லை
 4. இந்த பதிவுக்கும் இந்த டுவீட்டுக்கும் எந்த தொடர்புமில்லை…!
 5. நன்றி…!

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

9 thoughts on “இணையத்தில் திண்ணைப் பேச்சு”

 1. ஏனய்யா…. ஆளாளுக்கு போட்டு வாங்குகிறீர்கள்.ஐயா லோஷன்.., நீங்கள் ருவீட்ட வந்ததும் நான் வரவேற்றது எப்படியென ஞாபகம் இருக்குதா?சேனைப் புலவுக்குள் யானை புகுந்தது போல…இப்பொழுது, எங்களை நொந்து என்ன பயன்…?

 2. சந்திக்கு வராத திண்ணை:அசின்மல்லிகாலோஷன்சாரல் சயந்தன்கானா பிரபாபுல்லட்உச்சக்கட்ட போட்டியில் அடிக்கடி பல தலைகள் உருளுகின்றன.

 3. இந்தப்பயலை யார் என் திண்ணைக்குள் விட்டது? ஒளிந்து நின்று மற்றவன் திண்ணையை பாரக்கும் வசதிகள் உண்டோ? படுபாதகன் வேட்டியை உருவிவிட்டானே?திண்ணைக் கலாச்சாரம் பேணும் குழுவினர்….

 4. //I'm very busy with office work…No time for other work..உண்மையாத்தான் சொன்னா நம்புங்கோவன்.. ஏன் இப்படி சந்தேகப்படுகிறீங்க.. //இது ஒரு நகைச்சுவைப் பதிவு அல்ல, கடும் சீரியஸ் பதிவு ஆகும்.இதுவேறயா..?

கருத்துக்கள் மூடப்பட்டது