அழகு – காதல் – கடவுள் – பணம்

நான் பதிவு எழுதுவதே அபூர்வம், தொடர்பதிவு எழுதியதே இல்லை. இது தான் நான் முதல் முறையாக வலைப்பதிவில் எழுதும் தொடர் பதிவு. ஆதலால் விதிமுறைகளும் தெரியாது, இந்த தொடர்பதிவின் வரலாறும் தெரியாது. ஏதோ கொடுக்கப்பட்ட தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.

அழைத்தவர்:

 • மயூரேசன் – நன்றி… 🙂

அழைப்பது:

 • யார் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை போன்ற விபரங்கள் தெரியாததால் யாரையும் அழைக்கப்போவதில்லை. – தப்பிச்சிட்டாங்க… 🙂

—————————————-

அழகு

அக அழகு, புற அழகு, பிற அழகு என்று பல அழகுகள் இருப்பதாக அறிஞர் பெருமக்கள் கூறுவர். ஆனாலும் எனக்கு அது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. எனக்கு அழகு என்றவுடன் ஞாபகம் வருவது ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள். பொதுவாக இயற்கையின் அழகு பிடிக்கும். இது பெண்களையும் சேர்த்து தான்… 😉

அழகியல் சிறப்புள்ள புகைப்படங்களை எடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அதுவும் கைகூடலாம். (இதில் Nude photography (NOT erotic photography) போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு)

காதல்

காதலில் வெற்றியா தோல்வியா என்பதல்ல முக்கியம், காதலித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியம் என்பது என் கருத்து. காதலில் எனது அனுபவங்களை தொகுத்து கதை ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்….(ஆனால் எப்போது எழுதி முடியும் என்பது தெரியாது 🙂 )

கடவுள்

இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது இருக்கிறது என்பதாவ அமையும் என்பது “Nothing means Something” என்ற கூற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம். ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். (இது ஒரு தெளிவான கூற்று, விளங்காதவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்க முடியும் 😉 ).

பணம்

பணம் என்பது நாம் செலவு செய்யும் வரை பெறுமதியற்றது, ஆதலால் பணத்தை செலவு செய்வதே பிடிக்கும். ஆனாலும் குறுகியகாலத்துக்கு சேமித்து மொத்தமாக செலவளிப்பது எனது வழக்கம். செலவு செய்வதற்கு என்பதை தாண்டி பணத்தின் மீது ஆர்வமில்லை. (வேறு எதற்கு தான் என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, எப்போதுமே செலவுசெய்யாமல் தொடர்ந்து சேமிக்கும் யாரிடமாவது கேட்கவும்…)

—————————————-

பானையில் அவ்வளவுதான்…. ஆகவே பதிவிலும் அவ்வளவே…

அன்புடன்,
நிமல் (எ) நிமலபிரகாசன்

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

15 thoughts on “அழகு – காதல் – கடவுள் – பணம்”

 1. //பொதுவாக இயற்கையின் அழகு பிடிக்கும். இது பெண்களையும் சேர்த்து தான்… ;)//ஓ…! அப்படியோ ;)//காதலில் எனது அனுபவங்களை தொகுத்து கதை ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்//சொந்தக் கதைகள் சோக கதைகளாகவே இருக்கும். தங்களுக்கு எப்படி?//தெளிவான கூற்று, விளங்காதவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்க முடியும்//இதுக்கு மேலும் விளக்கம் கேட்டு வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை ;)அழைப்பை ஏற்று மானத்தைக் காப்பாற்றியமைக்கு நன்றிகள் 😉

 2. "அழகியல் சிறப்புள்ள புகைப்படங்களை *எழுக்கவேண்டுமென்பது* நீண்டநாள் ஆசை" *எடுக்கவேண்டுமென்பது* அப்படிதானெய் பாஸ். "இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது" அதாகப்பட்டது இருக்கு தானெய் பாஸ். இல்லாட்டி இருக்கு ஆனா இல்லையா! "பானையில் அவ்வளவுதான்…. ஆகவே பதிவிலும் அவ்வளவே…" உங்கள் தன்னடக்கம் வாழ்க.

 3. /////கடவுள்இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது இருக்கிறது என்பதாவ அமையும் என்பது "Nothing means Something" என்ற கூற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம். ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். (இது ஒரு தெளிவான கூற்று, விளங்காதவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்க முடியும் 😉 ).////நிமல்…..தங்களின் கடவுள் குறித்த கருத்தை விளக்கமாக பதிவொன்று இடுங்கள். அது பலருக்கு (எனக்கும்தான்) தங்களின் கடவுள் குறித்த நிலைப்பாட்டை விளக்க பயன்படும். என்னுடைய கடவுள் குறித்த எண்ணத்தை காண இங்கு கிளிக்கவும்.http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_16.html

 4. @Mayooresan://சொந்தக் கதைகள் சோக கதைகளாகவே இருக்கும். தங்களுக்கு எப்படி?//இது என்ன தத்துவம்… கதை சோகமா இல்லையா என்பதும், முடிவு யாருக்கு சோகம் என்பதும் முடிவில் தான் தெரியும்.

 5. @மருதமூரான்:நானே விளக்கமான விளக்கம் கொடுத்தால் என் விசயம் விளங்கீடுமெண்டு விளக்கமில்லாம சொன்னா, அதுக்கும் விளக்கம் கேக்கிறீங்களே பாஸ்…உங்க பதிவை படித்த பின் அங்கே கருத்துரைகிறேன்.வருகைக்கு நன்றி…!

 6. // ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். //நிமல் உங்களின் மேற்சொன்ன கூற்று பற்றிய சிறிய சந்தேகம் எனக்குண்டு. இதில் ஒரு Comma விடுபட்டுப் போய்விட்டதா? அல்லது அப்படியாகவே எழுதப்பட்டதா?அதாவது, 1. நான், கடவுள் இல்லை என்று சொல்லமாட்டேன்.2. நான் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டேன்.இருந்தாலும், இந்த வசனம் கமலின் தசாவதாரம் படத்தின் இறுதி டயலொக்கை ஞாபகப்படுத்திப் போனது என்னமோ உண்மைதான்.உங்களின் பானை, அகப்பையாலான அவையடக்கம் நச்.இனிய புன்னகையுடன்,உதய தாரகை

 7. //காதலில் வெற்றியா தோல்வியா என்பதல்ல முக்கியம், காதலித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியம்யதார்த்தமான கருத்து. பிடிச்சிருக்கு…உங்களை உங்கள் பள்ளிக்கால நினைவுகளை மீட்கும் தொடர் விளையாட்டுக்காக அழைத்திருக்கிறேன். வேலை இடம்கொடுக்கும்போது எழுதுங்கள்…

 8. குறைந்த சொற்கள.. ஆனால் கருத்துக்கள் நிறைவு..உங்கள் படப்பிடிப்பு திறன் குறித்து பதிவர் சந்திப்பின் பின்னர் வியந்திருக்கிறேன்..//(இதில் Nude photography (NOT erotic photography) போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு) //எடுத்தால் காட்டுங்கள்..வந்தியிடம் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.. ;)//கடவுள்இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது இருக்கிறது என்பதாவ அமையும் என்பது "Nothing means Something" என்ற கூற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம். ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். //எனக்குப் புரிந்தது.. காரணம் நானும் கமல் ரசிகன்.. (நீங்களுமா??)template n fonts 🙂

 9. நன்றி லோஷன் அண்ணா, வருகைக்கும் கருத்துக்களுக்கும்…//எடுத்தால் காட்டுங்கள்..வந்தியிடம் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.. ;)//இலங்கையில் இவ்வாறான புகைப்படங்கள் எடுப்பதில் சட்டரீதியான தெளிவின்மை இருக்கிறது, தவிரவும் வாய்ப்புக்கள் அமைவதும் கடினம். அண்ணல் வந்தி பற்றி பெரும்(ப)பாலான வதந்திகள் பரவுவது ஏன்…? ஏன்…? ஏன்…?திரைப்படங்களை தவிர்த்து நான் ஒரு கமல் ரசிகன்…!

 10. "இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை .." மிக அழகாகவும் பூடகமாகவும் உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

கருத்துக்கள் மூடப்பட்டது