இன்று தோழர் சே’யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார்.
சே குவேரா அல்லது ‘சே‘ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) எனக்கு முதலில் அறிமுகமாவது 1999-2000 ஆண்டுக்காலப்பகுதியில் தான். அப்போது தான் நான் மார்க்ஸிசம், சோசலிசம் போன்ற பலவற்றையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அக்கலப்பகுதியில் தான் இன்னொரு புரட்சியாளராக சே அறிமுகமாகிறார். அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களிலும் சே தொடர்பான பல தகவல்களை கேட்டும், வாசித்தும் அறிந்திருக்கிறேன்.
இத்தகைய பலதரப்பட்ட வாசிப்புக்கள் சே இன்னொரு புரட்சியாளர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்ற பிம்பத்தை என்னுள் உண்டாக்கின என்றே எண்ணுகிறேன். ஆனாலும் இன்று சே ஒரு வியாபார குறியீடாக (fasion icon) மாற்றப்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் எதிர்மறை விளைவு இவ்வாறானதாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே எனது அவா.
சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல பரிமாணங்களை கொண்டிருந்த சே பற்றி நான் தெரிந்து கொண்டுள்ளவை மிக சொற்பமே. அதனால் தான் சே பற்றி இன்னமும் வாசிக்க விரும்புகிறேன்…!
பி.கு: ப(சி)லர் தெரிந்து கொள்ள விரும்பிய என் குறுந்தாடிக்கான காரணத்தை இந்த பதிவு கொடுத்திருக்கலாம். 🙂
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
wonderfull!!!!
{ப(சி)லர் தெரிந்து கொள்ள விரும்பிய என் குறுந்தாடிக்கான காரணத்தை இந்த பதிவு கொடுத்திருக்கலாம்}நிமல், இது புதுசா காரணம் ஒண்டு கண்டுபிடிக்கிறதுமாதிரியெல்லோ இருக்கு?வருசக்கணக்கா கத்தி படாத முகத்தில வளர்ந்தது அவ்வளவுதானே? :)))
அதுக்கு பிறகும் கத்தி படாததுக்கு இதை காரணமாகவும் சொல்ல்லாம்.ஆனா நான் சொல்ல வந்தது, இதைப்போல சே அவரின் கருத்துக்களுக்காகவோ கொள்கைகளுக்காகவோ இல்லாமல் ஒரு fasion icon ஆக மாறிவிடும் நிலைமையையே…!