எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.
அடுத்த நாளுக்கு பிளான் போட்டாலே சரியா செய்ததா சரித்திரம் இல்லை. இதில ஒரு வருசத்துக்கு To-Do List வேற போடுறாராம் எண்டு சொல்லுறது கேக்குது. ஆனாலும் என்ட கொள்கை என்னெண்டால் (இது வேறையா) ‘திட்டமிடாம இருக்கிறத விட திட்டமிட்டு செய்யாம விடுறது மேல்’. (மற்றதெல்லாம் female)
அந்தவகையில 2009ம் ஆண்டுக்கான எனது திட்டப்பட்டியல்…
Academic
- முதலாவதாக Project eID ஐ நேரத்துக்குள்ள முடிக்கோணும் (இப்பிடி புளோக் எழுதி நேரத்த வீணாக்காம).
- ஆராய்ச்சி கட்டுரைகளை திட்டமிட்டபடி வெளியிடுதல், முடிந்தால் இன்னும் சிலதும் எழுதலாம்.
- இறுதி ஆண்டு பரீட்சை !!!.
- Google Summer of Code (நான் பங்குபற்ற ஏலுமோ தெரியாது… பாக்கலாம்…).
- மேல் படிப்புக்கு சரியா திட்டமிடவேணும் (இதுக்கு மேலையுமா…!).
Professional
- இலங்கை பதிவர் திரட்டியை செய்து முடித்தல், முடிந்தால் பதிவர் சந்திப்புக்கள்.
- ஒரு நல்ல புகைப்பட கருவி, சிறிய வீடியோ கமரா வாங்குதல்.
- குறைந்தது ஒரு (பயண) ஆவணப்படம் செய்தல்.
- சுயதொழில் திட்டமிடல் (ஏனிந்த வேண்டாத வேலை….?).
- ஒரு நிறுவனம் பதிவு செய்தல். (புளோக்கில பதிவு போடுறது இல்லை…).
Personal
- வலைப்பதிவுகளிலும் (ஆங்கிலத்திலும் தமிழிலும்) தரமான பதிவுகள் அதிகம் எழுதலாம்.
- லியோ கழக நடவடிக்கைகளில் இன்னும் அதிகமா நேரம் செலவளிக்கலாம் (ஒரு சமூக அக்கறை தான்).
- நூலகம் தளத்திற்கு அதிகரித்த பங்களிப்பு… !!
- வெளிநாட்டு பயணம்/சுற்றுலா போகலாம் (சும்மா…).
- ஒரு சில விட்டுப்போன மருத்துவ சிகிச்சைகளை செய்யலாம்.
- ஆரோக்கியமான முறையில் கொஞ்சம் எடை கூடலாம். 🙂
இதுவே ஓவர், இதுக்குமேல எழுதினா ரொம்ப ஓவராயிடும்.
பாக்கலாம் இதில எவ்வளவு செய்யலாம் எண்டு.
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
நூலகத்துக்கு ஒண்டுமே செய்யிறதா இல்லையா :(உடனடியாக இந்த லிஸ்டில் நூலகத்துக்கான பணிகளை சேருங்கள்.. இல்லாவிட்டால்…. !
ம்… கொஞ்சம் ஓவர்தான்… வாழ்த்துக்கள் …
:-)புது வருட வாழ்த்துகள்
எல்லாம் சரி… வாழ்க்கைக்கு ஒரு துணை. அது எப்போ?
//# சுயதொழில் திட்டமிடல் (ஏனிந்த வேண்டாத வேலை….?).# ஒரு நிறுவனம் பதிவு செய்தல். (புளோக்கில பதிவு போடுறது இல்லை…).//—————————————–அருமையான, துணிச்சலான, முடிவு.திறமையான, துடிச்சலான உமக்குஇது பெரிய வேலையில்லை – எனக்குள்ளேபெருமையாத்தானிருக்கு! – என்றாலும்முழுமையான வெற்றியின் முதற்படிக்குமுன்பேமுதுகுடைந்தோர் எத்தனையோ பேர்! பொறுமையாகக் கவனமாகச் செயலாற்றும்.எங்கள் கருமையான சரித்திரத்தைக் கழுவும் பணியிலும்உம் செழுமையான வெற்றிக்கோர் பங்கிருக்கும்.ஆதலினால், வரும்,போகும் ஆண்டுகளைச்சொல்லிவாழ்த்துதலை விட்டுவிட்டுநிறம்மாறா உறுதி தந்த தமிழ்மொழியின்வரம் போல வந்த உங்கள் நலம் வாழ வாழ்த்துகிறேன்!
@மு.மயூரன்:நூலக பணிகள் நிச்சயமாக உண்டு…:)
@சுபானு: எனக்கே விளங்குது.. ;)@'டொன்' லீ; நன்றி… வாழ்த்துக்கள்…!
@ஆதிரை: ஒரு மனுசன் நிம்மதியா இருக்க கூடாதோ…. 🙂
@ஆதித்தன்:நன்றி + வாழ்த்துக்கள் ஆதி…!நிச்சயமாக இது இப்போதைக்கு ஒரு ஆசை மட்டும் தான், பார்க்கலாம் காலம் சொல்லும் பதிலை…!
2008 இல் செய்ய நினைத்தவை எண்டு ஒரு பதிவு போடலாம்
@மதுவதனன் மௌ:2008இல பெருசா எதுவும் செய்ய நினைக்கவும் இல்லை, செய்யவும் இல்லை… 🙂