ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்.

இது சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை பேரவாவுடன் எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களும் ஊக்குவிப்புக்களுமே இனிவருங்காலங்களில் எமது ஒலியோடையை மேலும் மெருகேற்ற உதவிபுரியும்.

Download

குறிப்புக்கள்:

கவனிக்க:
ஃபயர்ஃபொக்ஸ் என்பது ஒரு பதிவுசெய்யப்பட்ட வியாபாரக்குறியாகும். நாம் எந்த மொழியில் கதைப்பதாக இருந்தாலும் அதற்குரிய சரியான பெயரைச்சொல்லி அழைப்பதே பொருத்தமானது. பெயரை நேரடித் தமிழ்ப்படுத்தலில் இணக்கமில்லையாதலால் நாம் இங்கு ஃபயர்ஃபொக்ஸ் என்றே பயன்படுத்துகிறோம்.

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

8 replies on “ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள் [1.01]”

 1. இதுவரை நாளில் நான் கேட்டவற்றில் / நானே செய்தவற்றில் கூட அல்லாத / பெறுமதி மிக்கதொரு பொட்காஸ்ட் ஆக இதைக் காண்கிறேன். நிறைந்த உழைப்பும் நீடித்த திட்டமிடலும் தேவைப்பட்டிருக்கும். வாழ்த்துக்கள். பரவலடையச் செய்யுங்கள்.

  நுட்ப விடயங்கள் பேசப்படுவதால் முக்கியமானவற்றை எழுத்துவடிவில் குறிப்பில் தந்திருப்பது சிறப்பானது.

 2. நன்றி சயந்தன் அண்ணா…

  ஒரு ‘மூத்த ஒலியர்’ என்றவகையில் உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

  முதலாவது என்பதால் திட்டமிடல் இருந்தது, அதுபோல் தொடர விருப்பம் தான்…

 3. ஒலித் தெளிவு சிறப்பாக இருக்கின்றது. firefox இன் நீட்சிகளைப் பற்றிய அடிப்படையான தகவல்களை மிகச்சிறப்பாக தமிழில் தந்திருக்கின்றீர்கள்.

  பின்னணி இசையும் சிறப்பாக இருக்கின்றது.
  வாழ்த்துக்கள்

 4. வாழ்த்துக்களுக்கு நன்றி shayanth
  தொடரும் ஒலிப்பதிவுகளில் மேலும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறோம்.. முதல் முயற்சி என்பதால் சிறு தடுமாற்றங்கள் சில…பொறுமையாக இருந்து கேட்ட எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 🙂

 5. நல்ல முயற்சி… பயனுள்ள விடயங்களை பற்றி கதைத்திருக்கிறீர்கள்.. அதற்காகவே விஷேட பாராட்டுக்கள். 🙂
  நிமலின் தமிழ் நன்றாக இருந்தது..

  //சயந்தன் சொன்னது…
  இதுவரை நாளில் நான் கேட்டவற்றில் / நானே செய்தவற்றில் கூட அல்லாத / பெறுமதி மிக்கதொரு பொட்காஸ்ட் ஆக இதைக் காண்கிறேன்//
  :)):))
  இதுவரை நாளில் நான் கேட்டவற்றில் உருப்படியானது இதுவே..

 6. நன்றி பாவை…

  //இதுவரை நாளில் நான் கேட்டவற்றில் உருப்படியானது இதுவே..//
  இந்த கருத்துக்கு காரணம் ஏதோ ஏதோ உட்பூசல் போல இருக்கிறது 🙂

Comments are closed.