பிரிவுகள்
தொழில்நுட்பம்

தசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை…!

ஜூன் 17: பயர்பாக்ஸ் திருவிழா…!

பயர்பாக்ஸ் பயன்படுத்தாத பண்பாளர்களுக்கும், பயர்பாக்ஸே கதி என கிடக்கும் என் இனிய நண்பர்களுக்கும்….

பயர்பாக்ஸ் 3′ நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) வெளியாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதிகளவான பிரதிகளை முதல் நாளில் பதிவிறக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

டவுண்லோட் நேரம்: (சாதனைக்கு இந்த நேரத்தில் டவுண்லோடவும்)
இந்தியா/இலங்கை – செவ்வாய் இரவு 8.30 10.30 (Indian Standard time)
அமெரிக்கா – காலை 10:00 (San Francisco time)
ஏனைய இடங்களுக்கு – இங்கே பார்க்க

முதல் நாள் முதல் காட்சி என்பதெல்லாம் எமக்கு எவ்வளவு நெருக்கமானவை என்பதை இந்த தசாவதார வாரத்தில் சொல்லவும் வேண்டுமா…!!

உலகளாவிய ரீதியில் பல இலட்சம் பேர் பங்கு பெறும் இந்த டவுண்லோட் திருவிழாவில் நீங்களும் மிக இலகுவாக பங்குபெற முடியும். வயரை வாயால் கடித்து காரோட்டும் சாகசம் 😉 எதுவும் செய்ய தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) ‘பயர்பாக்ஸ் 3′தரவிறக்குவது (டவுண்லோட்) மட்டுமே…!

14,000 இற்கும் அதிகமான மேம்படுத்தல்களுடள் பயர்பாக்ஸ் 3 உங்களுக்கு வேகமான, பாதுகாப்பான, இன்னும் சிறப்பான இணைய அனுபவத்தை பெற்றுத்தரும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பயர்பாக்ஸ் விசிறி என்றால், புதிய பயர்பாக்ஸை தரவிறக்கி விசிறிப்பாருங்கள். இதுவரை பயர்பாக்ஸ் பாவிக்காதவர் என்றால் இப்பவாவது விசிறிப்பார்க்கலாம்…!

வாருங்கள்… உலக சாதனை ஒன்றின் பங்காளராகலாம்…!!!

(தலைப்பு காரணம் : தசாவதார வாரத்தில் இப்படி தலைப்பு வைக்காட்டி தமிழ்மணம் காட்டாதாம்)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: இணையம், பயர்பாக்ஸ், internet, firefox, world record, genius, download day

10 replies on “தசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை…!”

இதில் தமிழ் எழுத்துக்கள் சிதைவு பிரச்சனை சரி செய்ய பட்டு இருப்பதாக கேள்விபட்டேன் உண்மையா?உங்கள் செய்திக்கு நன்றி 🙂

Like

//இதில் தமிழ் எழுத்துக்கள் சிதைவு பிரச்சனை சரி செய்ய பட்டு இருப்பதாக கேள்விபட்டேன் உண்மையா?//உண்மைதான் கிரி….வருகைக்கு நன்றி!

Like

அதெல்லாம் பட்டையைக் கிளப்பிடுவோம். கூகுள் ஆண்டவரைத் திகைக்க வைத்துவிடுவோம்

Like

Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; en-GB; rv:1.9) Gecko/2008052906 Firefox/3.0//இது எனது பயர்பொக்ஸ் about இல் எடுத்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தானியங்கியாக தரவிறக்க update கேட்டதே…உபுண்டுவிலும் அதே..ஒருவேளை நாளை உத்தியோகபூர்வ வெளியீடா?

Like

//இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தானியங்கியாக தரவிறக்க update கேட்டதே… //சயந்தன் என்னுடையது இன்னமும் 2.0.0.14 இல் தான் இருக்கிறது. அப்டேற் இல்லை என்றும் சொல்கிறது. நீங்கள் 3.0 பீட்டா பாவிச்சனீங்களோ?//ஒருவேளை நாளை உத்தியோகபூர்வ வெளியீடா? //சில வேளை அப்படியும் இருக்கலாம்…!!ஆனால் Updates உலக சாதனைக்கு கணக்கெடுபடாது 😦

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.