பிரிவுகள்
தொழில்நுட்பம்

ஜிமெயிலில் தமிழ்மணம் – Gmail Web Clips

‘ஜிமெயில் வெப் கிளிப்ஸ்’ முகப்பு பக்கத்தில் RSS/Atom வகையான ஓடைகள்(feeds) மூலம் தலைப்புச்செய்திகள், வலைப்பதிவுகள், விளம்பரங்கள் போன்றவற்றை காட்ட பயன்படும் ஒரு வசதி ஆகும். இவை உங்களின் இன்பாக்ஸிலுள்ள மின்னஞ்சல்களுக்கு மேலாக காட்டப்படும். (படம் – 1)

இயல்பிருப்பாக சில செய்தி ஓடைகள் இதில் காட்டப்படும். எனினும் இவற்றை உங்கள் விருப்ப தேர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் வசதி ஜிமெயிலில் வழங்கப்படுகிறது. ‘Settings’ -> ‘Web Clips’ என்று தெரிவுசெய்தால் காட்டப்படும் ஓடைகளின் பட்டியல் தோன்றும் இவற்றில் விருப்பமில்லாதவற்றை நீக்கி, விருப்பமான ஏனையவற்றை சேர்க்க முடியும்.

உதாரணமாக ‘தமிழ்மணம்.காம் திரட்டிய சமீபத்திய 25 இடுகைகள்’ என்ற ஓடையை எவ்வாறு சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

1. Settings -> Web Clips ஐ தெரிக

2. Search by topic or URL என்பதற்குள் சேர்க்க விரும்பும் ஓடையின் முகவரியை தருக. (படம் – 2)
(உ+ம்: http://www.thamizmanam.com/xml-rss2.php)

3. Search ஐ அழுத்துக

4. காட்டப்படும் தேடல் முடிவுகளில் Add என்பதை அழுத்துவதன் மூலம் ஒடையை Web Clips இல் சேர்க்கமுடியும். சேர்க்கப்பட்ட பின் கீழுள்ளது போல் காட்டப்படும். (படம் – 3)

5. Show my web clips above the inbox என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க.

முடிவு:

இவ்வாறு சேர்க்கப்பட்ட புதிய ஓடை காட்டப்படும். (படம் – 4)

ஒரு விளம்பரம்: 

இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி
(ஒரு பரீட்சார்த்த முயற்சி)
முகவரி – RSS ஓடை – OPML

மீண்டும் சந்திக்கலாம்…

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Internet, Gmail, labs, blogs, feeds, இணையம், ஜிமெயில், வலைப்பதிவு


This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

6 replies on “ஜிமெயிலில் தமிழ்மணம் – Gmail Web Clips”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.