வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். 😉

எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில கோப்புக்களை பயன்படுத்தும் தேவையும் ஏற்படுவதுண்டு.

இந்த தேவைக்காக இதுவரையும் நான் Explore2fs (தொ-1) (தொ-2) என்ற மென்பொருளையே பாவித்துவந்தேன். ஆனாலும் இதன் மூலம் கோப்புக்களை பிரதிசெய்தே பயன்படுத்த முடிவது இதை பாவிப்பதில் உள்ள அலுப்பான ஒர் விடையம். இருப்பினும் ஒருசில கோப்புக்கள் மட்டும் தேவைப்படுகையில் பயனுள்ளது.

எனவே இத்தேவைக்கான மாற்று வழிகளைப்பற்றி தேடியபோது இந்தப் பக்கம் சிக்கியது. இங்கு குறிப்பிட்டவற்றில் பலவழிகளிலும் சிறந்த்தாக கருதுவது Ext2 IFS For Windows. இதன் முக்கிய சிறப்பாக Ext2, Ext3 வகை partitionகளுக்கும் வாசிக்க, எழுத பயன்படும். அத்துடன் இது அனேக விண்டோஸ் பதிப்புக்களில் இயங்கும். (NT 4.0, 2000, XP, 2003, Vista)

மேலதிக விபரங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் தொடுப்புகள் வழி செல்க…!

கடைசியாக ஒரு கேள்வி, ‘partition‘ என்பதற்கு பொருத்தமான தமிழ்ப் பதம் என்ன?

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

5 thoughts on “வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்”

  1. இந்த மாதிரி அவஸ்தையெல்லாம் வராமல் இருக்க தனியாக ஒரு பார்ட்டீஸியன் போட்டு அதிலேயே சேமிக்கலாம்,இப்படி செய்வதால் விண்டோஸ் மற்றும் லினக்சில் பார்த்துக்கொள்ளலாம்.அதை Fat 32 ஆக வைத்துக்கொள்வது நலம்,அவசியமில்லை.NTFS ஆக இருந்தால் ஒரு கோப்பு 8 ஜி பி அளவில் கூட இருக்கலாம்.

  2. //கடைசியாக ஒரு கேள்வி, 'partition' என்பதற்கு பொருத்தமான தமிழ்ப் பதம் என்ன?//வகிர்வு.இப்படி நான் பயன்படுத்துகிறேன்.சிலர் பகிர்வு என்கிறார்கள். ஆனால் அது அர்த்தப்பிழை. அங்கே எதுவும் பகிரப்பட (share) இல்லை அல்லவா?

கருத்துக்கள் மூடப்பட்டது