வலைப்பதிவுகளில் நான்

வலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இது ஒரு சிறு அறிமுகம், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு.

நான் முதல் முதலாக வலைப்பதிவொன்றை ஆரம்பித்தது 2005ம் வருட காலப்பகுதியில். அப்போது தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பாக நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதனால் நான் எனது TalkOut வலைப்பதிவில் ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தது அதற்கு இன்னொரு முக்கிய காரணியாக அமைந்தது. பாடசாலைக்கல்வியை தமிழில் கற்றதாலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படிக்கும் நோக்கம் இருந்ததாலும், ஆங்கிலம் கற்கவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதன்காரணமாக நான் ஆரம்பித்தது தான் இந்த வலைப்பதிவு. ஆனால் அதுவும் பத்திற்கும் குறைவான பதிவுகளுடன் நின்றுபோனது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை… 🙂 அதன் பின்னராக Yahoo 360ல் ஒரு இரண்டு பதிவுகள் எழுதினேன், ஆனால் அதிலும் தொடரவில்லை.

இறுதியாக 2006ல் (July 19, 2006) Bloggerல் நான் ஆரம்பித்ததுதான் The TalkOut Trojans! வலைப்பதிவு. (இந்த பெயரைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…) இதையும் நான் எனக்கான ஒரு கற்றல் தளமாகவே கருதினேன். கடந்த ஒன்றரை வருடமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று வரை ஒரு 64 பதிவுகள் (ஆஹா… உண்மை… நம்புங்க…!) எழுதியாகிவிட்டது. அவற்றில் பல என்னுடைய சுயதம்பட்ட பதிவுகளாகவும், இன்னும் சில கணிமை தொடர்பானவை என்று சொல்லக்கூடிய வகையிலும் அமைந்தவை. ஆங்காங்கே ஒருசில பதிவுகள் தமிழில் அமைந்தாலும், பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. இவை தவிர இன்னும் சில கூட்டு வலைப்பதிவுகளில் இருந்தாலும், அவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்ததில்லை.

ஆனாலும் நீண்ட நாட்களாகவே மனதிலிருந்த தமிழ் வலைப்பதிவு ஆசையும் இந்த வலைப்பதிவு வாயிலாக நிறைவேறுகிறது.

இந்த பதிவை இதுவரை வாசித்திருந்தாலே அது உங்களின் பொறுமையை காட்டுகிறது. 🙂 ஆதலால் இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன். இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Published by

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

8 thoughts on “வலைப்பதிவுகளில் நான்”

  1. வாங்க நிமல்நல்வரவாகுககாத்திருக்கோம்.

  2. வருக… தொடரட்டும் உங்கள் பணி, உங்கள் பாணியில் !

  3. தொடர்ந்து எழுதுங்க நிமல்,ஊக்கப்படுத்த நண்பர்கள் நாங்க இருக்கிறோம்!! வாழ்த்துக்கள்!!

  4. திவ்யா,நான் தமிழில் எழுத நீங்களும் உங்கள் வலைப்பதிவும் ஒரு முக்கிய காரணம்…வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !!

Comments are closed.