இன்று எனது கணனியிலுள்ள பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது இந்த பாடலையும் பல நாட்களின் பின்னர் கேட்க நேர்ந்தது. இது 2005ம் ஆண்டுப்பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கிய ‘முதல் சுவடு‘ இசைத்தொகுப்பில் இடம்பெற்றது.
Metal Rock வகை இசையை சார்ந்து அமைந்த இப்பாடல் வரிகளுக்காகவும் இசைக்காகவும் பலரின் எதிர்ப்பை சம்பாதித்த அதேவேளை, இன்னும் அதிக நண்ர்களின் வரவேற்பயும் பெற்றது.
நீங்களும் கேட்டுப்பாருங்க…!
பாடியோர் : நிதர்ஷன், பிரதீபன், கோகுல்
பாடல்வரிகள் : அருணன்
இசையமைப்பு : அருணன், சிந்துஜன்
தயாரிப்பு, ஒலிக்கலவை : நிமல்
பாடலை கேட்க:
பாடல்வரிகள்:
றோட்டு மேல போறான் ஒரு கேடி
அவன் வளக்கிறான் பிரஞ்சு தாடி
அவன் கையில இருப்பதுவோ பீடி
அதால் ஆகப்போறான் சீக்கிரமா பாடி
தினந்தோறும் டப்பாங்கூத்து ஆடி
தெருவெல்லாம் கும்மாங்கூத்து பாடி
கேடிமேல கண்ண வச்சான் லேடி
அவன் போகப் போறான் அவளேட ஓடி
கேடி சீதனமா கேட்டுப்புட்டான் கோடி
அத கேட்ட இடமோ மாடி…
கோபத்தாலே தள்ளிவிட்டா லேடி
கேடி ஆகிப்புட்டான் உடனே பாடி
பேராசை பெருநட்டம் தம்பி
நீ போகாதே பெண்களை நம்பி…
அதால் உனக்கு கிடைக்கும் ஒரு பொல்லு
பின்னால் உனக்கு ஏது ஒரு சொல்லு..!
கேடயக் குறிப்பு: எந்தக் கருத்துக்களும் பொதுவானவை அல்ல, தொப்பி சரியா இருக்கிறவங்க மட்டும் போட்டுக்கொள்ளலாம். 🙂
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
அந்த ஹம்மிங்க் நல்லா இருக்குது.அருணன் சிம்புவோட அப்பாவிட்ட வகுப்பெதும் எடுத்தவரோ?
நன்றி கௌபாய்மது,//அருணன் சிம்புவோட அப்பாவிட்ட வகுப்பெதும் எடுத்தவரோ?//:)
@கௌபாய்மது: அப்படி ஒன்றும் இல்லை… சும்மா ஒரு முயற்சி தான்… அதேபோல இன்னும் சில கேடிக் கவிதைகள் சீக்கிரம் வெளிவர உள்ளன்… 😉
@கௌபாய்மது: அப்படி ஒன்றும் இல்லை… சும்மா ஒரு முயற்சி தான்! இன்னும் சில கேடிக் கவிதைகள், சீக்கிரம் வெளிவரும்! ;)@நிமல்: முழுக் கவிதை எங்கையா போச்சு?
@Optimistic Marshwiggle (a.k.a.) அருணன்:முழுக் கவிதை இந்தப்பாட்டில இல்ல, அது மற்றப்பாட்டு… 🙂
Nice Song Nimal,Keep it Up!