நீ மறைந்த சேதி கேட்டு நெஞ்சுடைந்தது!
நீ கலந்த நினைவுகளில் கண்கசிந்தது!
நீ கதைத்த கதைகள் எல்லாம் காதில் கேக்குது!
உன் தோளில் கிடந்த எந்தன் கைவலிக்குது!
பூமலரும் உன்சிரிப்பை விதி அழித்ததா?
பண்பினிலெ சிறந்த உன்னை நாம் இழப்பதா?
பழகிவிட்ட நெஞ்சமுன்னை எண்ணி வாடுது!
விலகிவிட்ட உன்னுயிரின் பின்னேஓடுது!
விழிவழிய மனமழுது விண்ணைப் பார்க்குது!
எழுதவரும் கவிதையிலென் கண்ணீர் சேருது!
நீ் வளர்த்த நட்புஎன்ற பசுமை சிரித்திடும்!
நீங்கிடாது உன்நினைவு!
எம்முள் நிலைத்திடும்!
போய்வருக தோழனே!
நீ அமைதி கொள்ளுக!
பூங்காற்றாய் எங்கள் நெஞ்சில் என்றும் வீசுக!
நண்பர்கள்,
நாம்…
(கவி் – வி.விமலாதித்தன்)
உனது பிரிவால் வாடும்2004 உயர்தர பிரிவு மாணவர்கள் ஆகிய நாம் கண்ணீர் அஞ்சலியை எமதுகாணிக்கையாக செலுத்துகின்றோம
May his soul rest in peace, Deep condolence….