பயர்பாக்ஸ்க்கு அகராதி

பயர்பாக்ஸ் அகராதி நீட்சி

நண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம்.

Firefox EnTaTip - பயர்பாக்ஸ் அகராதி நீட்சி.jpg

வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன.

மிக விரைவில் மேலதிக விபரங்களுடன் வருகிறேன்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

19 thoughts on “பயர்பாக்ஸ்க்கு அகராதி”

  1. அகராதி என்றால், தமிழ்ச்சொற்களுக்கு ஆங்கில அர்த்தம் தருவது போன்ற நோக்கத்தைக்கொண்டதா அல்லது சொல்திருத்தும் நோக்கத்தைக்கொண்டதா?

  2. நிமல், நல்ல முயற்சி. வாழ்த்துகள். உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தரவுத் தள வடிவில், எப்படி சொற்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவித்தால் முயல்வோம். கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமத்திலும் நீங்கள் உதவி கோரலாம். ஏற்கனவே உங்கள் இடுகை பற்றி அங்கு தெரிவித்து உள்ளேன்.

  3. ரவிசங்கர்,//உங்களுக்கு என்ன தரவுத் தள வடிவில், எப்படி சொற்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவித்தால் முயல்வோம். //தற்போதைக்கு CSV கோப்பு வடிவிலான ஒரு தரவுத் தளத்தையே பயன்படுத்துகிறோம்.//கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமத்திலும் நீங்கள் உதவி கோரலாம்.//தகவலுக்கு நன்றி…!

  4. நிமல், ஒரு இலட்சம் சொற்களுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட ஆங்கிலச் சொற்திருத்திகள் இருக்கின்றன என நினைக்கின்றேன். எனவே வேறு தரவுத் தள வடிவில் செய்ய சாத்தியமா என்று முயலலாம். எவ்வளவு கூடுதல் சொற்களோ அவ்வளவு நல்லது தானே?

  5. நிமல் & கதீஸ்,வரவேற்கத்தக்க நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.இந்த இடத்தில் சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.//இப்போதைக்கு ஆங்கிலம் -> தமிழ் உள்ளது.மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனிப்பீடத்திலுள்ள தமிழ் விரிவுரையாளர்களின் நெறிப்படுத்தலில் ஆங்கிலக் கலைச்சொற்களை தமிழ்ப்படுத்தும் முயற்சியொன்று இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவே உள்ள அகராதிகளுக்கு புறம்பாக அவற்றின் வரைவிலக்கணங்களையும் உள்வாங்கியவாறு புதிய கலைச்சொல் அகராதிக்கான முயற்சி இடம்பெறுகின்றது. நீங்கள் அவர்களுடன் தொடர்பேற்படுத்துவதன் மூலம் உங்கள் முயற்சிக்கான ஆதரவினை பெறமுடியுமென எண்ணுகின்றேன். ஆனால், நண்பர் மு.மயூரன் வினாவியதைப் போன்று சொல் திருத்தும் நோக்கத்தைக் கொண்ட அகராதி தயாரிப்பில் நீங்கள் முயற்சி செய்வீர்களாயின், அது மிகவும் பயன்மிக்கதாக அமையுமல்லவா?எனினும், உங்கள் இருவரினதும் இந்த முயற்சிக்கு மீண்டுமொரு தடவை எனது வாழ்த்துக்கள்!

  6. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ மேலே குறிப்பிடப்பட்டுள்ள தளம் நல்ல தகவல்களைக் கொண்டுள்ளது.என்னுடைய கருத்து :இருக்கும் வார்த்தைகளை வைத்து ஆரம்பிக்கவும். உங்களிடம் இல்லாத வார்த்தைகளுக்காக "suggest a meaning" option தரலாம். தெரிந்தவர்கள் அதில் சேர்த்தல் அது உங்களுக்கு மடல் அனுப்பும் வகையில் செய்யலாம்.அன்புடன்ஜீவ்ஸ்

  7. //ரவிசங்கர் said… நிமல், ஒரு இலட்சம் சொற்களுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட ஆங்கிலச் சொற்திருத்திகள் இருக்கின்றன என நினைக்கின்றேன். எனவே வேறு தரவுத் தள வடிவில் செய்ய சாத்தியமா என்று முயலலாம். எவ்வளவு கூடுதல் சொற்களோ அவ்வளவு நல்லது தானே?//உண்மைதான், ஆனாலும் ஆரம்ப வெளியீட்டுக்கு பின் மாற்றங்களை செய்யலாம் என்று இருக்கிறோம்..!

  8. நிமல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். என்ன செய்ய வேண்டும் எண்டு கொஞ்சம் விளக்கமா சொன்னா ஏதாவது முடிஞ்சதை செய்வம் எண்டு பாக்கிறன்.

கருத்துக்கள் மூடப்பட்டது