பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம்,

நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!)

ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை.


வாதுவ கடற்கரை, இலங்கை. மாலை 6 மணி.


வீட்டு குளியலறை. இரவு 10 மணி

படம் காட்டியாச்சு. பின்னூட்டம் போடுபவர்கள் போடலாம். பதிலுக்கு உங்கள் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போடப்படும் :). அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

18 replies on “பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்”

 1. //வால்பையன் said…

  நீங்கள் எடுத்த படங்களா, நன்றாக இருக்கிறது//

  வால்பையன்…

  சொன்னா நம்பணும்,
  நானே நான்தான் 😉
  நம்புங்க !!!

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!

 2. பதிலுக்குப் பதில் பின்னூட்டம் வேண்டாம். 🙂 அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பின்னூட்டம் இடுவது, மற்றும் தனிப்பட்ட உரையாடல்களாக பின்னூட்டங்கள் அமைவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடு இல்லை.. அதனாலேயே பெரிதாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை.. ஆனாலும் இந்த இரண்டு படங்களும் நன்றாக இருக்கின்றன என்று சொல்லாமல் போக விரும்பவில்லை.. படத்தை பெரிதாக்கி பார்க்கும் போது படத்தின் தரம் குறைந்தது போன்ற உணர்வு.. சட்டத்திற்கான நிறத் தெரிவு நன்றாக இருக்கிறது.

 3. பாவை…//பதிலுக்குப் பதில் பின்னூட்டம் வேண்டாம்.//அது சும்மா… ;)//படத்தை பெரிதாக்கி பார்க்கும் போது படத்தின் தரம் குறைந்தது போன்ற உணர்வு.. //உண்மைதான்…வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!!!

 4. படங்கள் மிக அழகான இருக்கின்றன… ஆனால் இது என்ன.. //அதிகம் தெரிந்தோருக்கும்/ ஒன்றும் அறியாதோருக்கும் இந்த நிலை சகஜம்தானே.. // தன்னடக்கமும் நன்றாகத்தான் இருக்கின்றது.. ( இதில் நீங்கள் எந்த ரகம் ? ):)

 5. இரண்டு படங்களும் நல்லா இருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Comments are closed.