Gmail இடைமுகம் ஏற்கனவே பல மொழிகளில் உள்ளது பலரும் அறிந்ததே. இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே இதுவரை இருந்தது. கூகிளின் பிரபலமான இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின்(Gmail) இடைமுகம் இப்போது தமிழ் உட்பட அனேக இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் (Tamil) உட்பட اردو (Urdu) , मराठी (Marathi), हिन्दी (Hindi), বাংলা (Bangla), ગુજરાતી (Gujarati), ଓଡିଆ (Oriya), , తెలుగు (Telugu), ಕನ್ನಡ (Kannada) மற்றும் മലയാളം (Malayalam) ஆகிய மொழிகளில் இப்போது ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தலாம். இதனால் இந்திய பயனர்களில் 90% ஆனவர்களை தமது சொந்த மொழியிலேயே பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்படுகிறது.
Gmailல் வேறு மொழிக்கு மாற்றுவதற்கு ‘Settings’ ஐ தெரிவு செய்து அங்கு விரும்பிய மொழியை தெரிவு செய்து மாற்றங்களை சேமிக்கவும்.
ஆனாம் தமிழை விட ஆங்கில இடைமுகமே எனக்கு இலகுவாக இருக்கிறது. இதைத்தான் பழக்க தோசம் என்பதோ…! 🙂
நன்றி: அப்பாஸ்
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
தகவலுக்கு நன்றி நண்பரே!
நீர் ஒரு தமிழின விரோதி. தமிழினத் துரோகி. அதான் தமிழை விட ஆங்கிலம் இலகுவாகத் தெரிகிறது. ஹிஹி
Inbox க்கு தமிழிலும் இன்பாக்ஸ் என்பது எனக்கு புதிய செய்தி.
@மாயவரத்தான்ஹிஹி… ஹிஹி… :))
@SP.VR. SUBBIAHவருகைக்கு நன்றி.
@கொழுவிஇன்பாக்ஸ் மட்டுமில்லை. ஸ்பேம், லேபிள் உட்பட இன்னும் பல சொற்கள் அந்நியமாகவே இருக்கின்றன.
நீங்கள் மறைந்திருக்கிறீர்கள் என்பதற்கு பதில் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்று போட்டிருக்கலாம்.அத்தோடு வரிசையில் நிற்பவர்களை அயலட்டை எண்டு போட்டிருக்கலாம் 😉
//Inbox க்கு தமிழிலும் இன்பாக்ஸ்//i heard they are slowly translating into right words.
is it Gmail can be viewd in Tamil too??thanks for the info Nimal:-)