நண்பர்களுக்கு வணக்கம்,
பல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை.
ஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) இந்த பதிவில் எழுதுவது சாத்தயப்படாது என்றே நினைக்கின்றேன். அது போலவே பலரின் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதும் அவ்வப்போது தான் சாத்தியப்படலாம்.
ஆனாலும் ஒலியோடை பொட்காஸ்ட் பதிவை தொடர முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே அங்கு வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.
எனவே இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன்.
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
//பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. //உண்மைதான்… டப்பாங்குத்து தான் ஆடுகின்றன… உங்கள் Project சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🙂
All the very best for ur project work Nimal!!
நன்றி சுபானுநன்றி திவ்யா
இட்லி வடை மூலமாக உங்களை அறிந்துக் கொண்டேன். பதிவுகளை நன்கு பதித்துள்ளீர்கள்.முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.-தவப்புதல்வன்
நன்றி… தவப்புதல்வன்…மீண்டும் பெப்ரவரி 2009 இல் தான்…!!!
Best wishes for the project Nimal…Finish up that and join us later.anbudan aruna
நன்றி 'அன்புடன் அருணா'…!