எலி புரூஸ்லீ ஆன கதை….!

இந்த பதிவில் இடம் பெறும் சம்பவங்களும், கூறப்படும் பெயர்களும் அனேகமாக உண்மையே. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்படவேண்டிய தேவை இருந்தாலும் மாற்றப்படவில்லை. இந்த பதிவின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. இது ஒரு தீவிர ஆராய்சியின் முடிவாக எழுதப்படுவதுடன் இதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பாகவும் கருதலாம்.

முன்னொரு காலத்தில ஒரு பல்கலைக்கழக்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவாக தருகிறேன். எலி எலி என்று (இரண்டாவது எலி எதிரொலி) ஒரு நல்ல மாணவன் அங்கு படித்துவந்தார். அவரின் முதலாம் வருடத்திற்குரிய தோற்றத்தை இந்த படத்தில் காண்க.

இவ்வாறாக எலி என்ற காரணப்பெயரை பெற்று படித்து வந்த அந்த மாணவன் எல்லோராலும் அவரது தோற்றத்தை காரணம் காட்டி கிண்ணலடிக்கப்பட்டார். இது அவரின் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்திய அதேவேளை, அவர் தானும் வளர்ந்து காட்டுவேன் என்ற வைராக்கியத்தையும் பெற்றார். இதற்கான வாய்ப்பு அவருக்கு அவரின் மூன்றாம் வருடத்திலேயே கிடைத்தது.

அவர் தொழில் பயிற்சிக்காக (Industrial Placement) தெரிவு செய்யப்பட்ட மென்பொருள் நிறுவனத்தில் அனைவருக்கும் பகல் உணவு இலவசமாக வழங்கப்படும். ஆயினும் எலியானவர் அங்கு வழங்கப்பட்ட உணவை பயிற்சிக்காலத்தில் தவிர்த்தே வந்துள்ளார் என்றும் அக்காலப்பகுதியில் தனது நண்பர்களை சந்திப்பதையும் குறைத்து வந்துள்ளார் என்றும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறு 6 மாதங்கள் தலைமறைவாக (தொப்பியோடு) திரிந்த எலி 6 மாத முடிவிலேயே பொதுவில் வெளிப்பட்டிருக்கிறார்.

6 மாதங்களின் பின் எலியை பலர் றோட்டில் கண்டும் கதைக்காமல் போயிருக்கிறார்கள். இதனால் கடுப்பான எலி அவர்களை மறித்து தான் தான் எலி என்று எடுத்து சொல்லியும் பலரால் நம்ப முடியாமல் இருந்திருக்கிறது. காரணம் எலி ஆறே மாதத்தில் புரூஸ்லீ போல் மாறி இருந்திருக்கிறார்.

இது எவ்வாறு சாத்தியம் என்று சந்தேகம் கொண்ட நாம் தீவிரமாக ஆராய்ந்ததில் பின்வரும் இரு புகைப்படங்கள் சிக்கின.

எலியின் உணவுக் கோப்பை.

எலி வீட்டில் காணப்பட்ட சமையல் புத்தகம்.

அதுவரை காலமும் சைவ பட்சியாக் அறியப்பட்ட எலி உண்மையில் ஒரு ‘முட்டை சைவம்‘ வகை என்ற இரகசியம் இதன்பிறகுதான் வெளிப்பட்டது.

இந்த புகைப்படங்களையும் இதர சாட்சியங்களையும் ஆராய்ந்ததில் நாம் பெற்ற முடிவுகள்:

 • சைவ பட்சிகளில் பலவகை உண்டு

1. முட்டை சைவம்
2. முட்டை கேக் சைவம்
3. சிக்கன் சைவம் (இதில ஒருவகை ரோஸ்ற் சிக்கன் சைவம்)
4. மீன் சைவம் … மற்றும் இன்ன பிற

(இவர்களெல்லாம் சைவம் என்று சொல்லிக்கொண்டு இப்படியான பதார்த்தங்களையும் சேர்த்து அடிக்கிற ஆக்கள்.. 🙂 )

 • சைவ உணவுகளை மட்டும்(?) உண்பதன் மூலமும் உடல் எடையைக்கூட்ட முடியும்.
 • ஒவ்வொரு நாளும் ஒரு முட்டைக்கோப்பி குடிப்பது உடம்பு வைக்க உதவும். (இது எலியின் பகிரங்க அறிக்கையிலிருந்து பெறப்பட்டது). இதைக்கேட்டு இன்னும் fifty அடிக்காத சில பேர் (50 கிலோ எடை தாண்டாதவர்கள்) முட்டைக்கோப்பி இரகசியத்தை பின்பற்றுவதாகவும் தகவல்.
 • இவ்வாறாக உடலை மெருகேற்றிய பின் உடலிறுக்கமான T-Shirt களை தெரிவு செய்து அணிய வேண்டும். (‘ஏதாவது’ பலனை பெறுவதற்கு… எலிக்கு பலன் கிடத்ததா இல்லையா என்பது இன்னும் அறியக்கிடைக்கவில்லை). நீங்கள் சாதாரணமாக நடுத்தர அளவு (medium) அணிபவராயின் சிறிய அளவு (small) T-shirt ஐ தெரிவு செய்தல் நலம். (சும்மா exaggerate பண்ணிக்காட்டத்தான்..!)
 • மென்பொருள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கெல்லாம் தொப்பை மட்டும் வைக்கிறது என்ற கூற்றுக்கு எதிர்மறுப்பாக அமைந்திருக்கிறது எங்கள் எலியின் சாதனை.

கடைசியாக நாங்கள் சொல்வதை நம்பமறுக்கும் எலியின் (இப்போ புரூஸ்லீ) ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவும். நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை மட்டுமே…!

ஆராய்ச்சி:
CrazyBobs

படங்கள்:
கதீஸ், பிறைதீஸ்

கேடய குறிப்பு:

 • படங்களில் முகம் Gimp பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது. (சொன்னால் நம்பவும்)
 • படத்தில் காட்டப்படும் முகம் உண்மையான எலிதான் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. (இனி நிரூபிக்கப்படலாம்)

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

20 thoughts on “எலி புரூஸ்லீ ஆன கதை….!”

 1. நானும் முட்டைக்கோப்பி technique ஐ ஒருக்கா try பண்ணிப்பாக்கலாம் எண்டு நினைக்கிறன்! 😀 சிலபேர் ஓவரா குடிச்சு வயித்துக்குத்து வந்தாகக் கேள்விப்பட்டதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு!!!

 2. அண்ணோய்எலியின் தலைகீழ் விளைவுக்கு என்ன சாப்பிடணும் என்ன குடிக்கணும் என ஆராய்ந்து சொல்ல முடியுமா?நான் சின்ன ரிசேட் போடுவதையே விரும்புகிறேன். ஆனால் வயிற்றுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லார்ஜ் தேவைப் படுகிறது. (

 3. //இதைக்கேட்டு இன்னும் fifty அடிக்காத சில பேர் (50 கிலோ எடை தாண்டாதவர்கள்) முட்டைக்கோப்பி இரகசியத்தை பின்பற்றுவதாகவும் தகவல்.சயந்தனைச் சொல்லவில்லைத்தானே!

 4. @சயந்தன்//எலியின் தலைகீழ் விளைவுக்கு என்ன சாப்பிடணும் என்ன குடிக்கணும் என ஆராய்ந்து சொல்ல முடியுமா?//எதையும் அளவுக்கதிகமா சாப்பிடாம இருந்தா சரிவருமோ…(?)உங்களின் பிரச்சனைக்குரிய தீர்வையும் ஆராய்ச்சி மூலம் பெற்றுத்தர முயற்ச்சிக்கிறோம்.

 5. /இதைக்கேட்டு இன்னும் fifty அடிக்காத சில பேர் (50 கிலோ எடை தாண்டாதவர்கள்) முட்டைக்கோப்பி இரகசியத்தை பின்பற்றுவதாகவும் தகவல்.சயந்தனைச் சொல்லவில்லைத்தானே!//அது ஒரு அழகிய நிலாக்காலம் 🙁 நிமல் – நான் ஒண்ணும் செய்ய முடியாது. பரம்பரை ஜீன் என்று விட்டு அலுவலைப் பார்க்க வேண்டியதுதான். நண்பர்கள் சொல்வது போல சைவக் கடை முதலாளியாகவே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.

 6. நிமல்! மிகச் சிறந்த பதிவு!தமிழ்ப் பதிப்புலகின் [நக்கல் நையாண்டிப் பிரிவில்]தலை சிறந்த பதிவு.தொடரட்டும் உங்கள் [இது போன்ற]ஆராய்ச்சி!

 7. அன்பர்களே!தயவுசெய்து இவரது மனையை மீண்டும் ஒருமுறை பார்வை செய்யுமாறு வேண்டுகிறேன்!புதிதாக பல இயந்திரங்கள் உடல் பயிற்ச்சிக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வதந்தி!நன்றி

 8. புது இயந்திரங்களின் இறக்குமதி நம்பகமான வட்டாரங்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவற்றை புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் மூடப்பட்டது