வணக்கம்,
நீண்ட நாட்களாக பல வலைப்பதிவுகளை வாசித்த அனுபவத்தில் நான் அறிந்த ஒரு விடயம், முதலாவது பதிவிற்கு ‘வணக்கம்’ என்ற சொல் இருக்கத்தக்கவாறான தலைப்பை வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் ஒரு மாறுதலாக ‘பரீட்சார்த்த பதிவு’ என்று ஆரப்பித்தாகி விட்டது.
அடுத்து என்ன எழுதலாம் என்றால், சரியாக எதுவும் யோசிக்க முடியவில்லை. (வேலைப்பளு அதிகம் என்று(ம்) காரணம் கூறலாம்…) ஆனாலும் எதையாவது எழுதலாம் என்று தொடங்கித்தான் இவ்வாறு அரற்றி/அலட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேலும் இவ்வாறு எழுதினால் இதை மொக்கைப் பதிவு என்று இந்திய நண்பர்கள் சொல்லிவிடுவார்கள் என்பதால் (இலங்கையில் மொக்கை என்ற வார்த்தை அதிகம் பாவிக்கப்படுவதில்லை) அடுத்த விடையத்திற்கு வரலாம்.
ஏன் இன்றைய தினம்?
இன்றைய தினம் (29/02/2008) இந்த வலைப்பதிவை தொடங்க காரணம், எதாவது ஒரு காரணத்தால் இந்த வலைப்பதிவு அகில உலக பிரபலமாகினால், உலகெங்கும் பரந்துவாழும் ரசிக பெருமக்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக வருடாந்தம் பெருவாரியாக செலவுசெய்வதை தவிர்த்து, நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாக மட்டுப்படுத்தவே. 🙂
ஏன்? தமிழில் ஏன்?
இவை எனக்கும் உள்ள கேள்விகள். முக்கிய காரணம் எனக்கு தமிழ் மறக்கிறது. என்ன..? ஆம், நான் தமிழ் மொழிமூல பாடசாலையிலேயெ கல்விகற்றேன், எனக்கு தமிழ் ஒரு வாசகனாக பலவற்றை கொடுத்திருக்கிறது. அவ்வாறிருக்க இது என்ன கதை..? ஆனாலும் இதுதான் கசப்பான உண்மை.
காரணம்… தமிழில் எழுதி பலகாலமாகிறது. பல்கலைக்கழகம் சென்ற பின், ஆங்கில மொழி அறிவை பெற்று ஆங்கிலத்திலேயே எல்லா எழுத்து நடவடிக்கைகளையும் செய்வேண்டி உள்ளது. தமிழில் வாசிப்பதை தவிர்த்து வேறெதுவும் இல்லை. இது எனது தமிழில் ஒரு தேக்க நிலையை தேற்றுவித்துவிட்டது. உதாரணத்திற்கு, நான் இப்போது எழுதுவது கூட ஒரு நிலையான உரைநடையில் இல்லை. ஆகவே எனது தமிழறிவை நான் மீளப்பெற வேண்டும்.
தமிழனாய் இருந்து தமிழ் சரியாக தெரியாது என்று கூறுவது வெட்கக்கேடானது தான். ஆனாலும் அவ்வாறே இருக்காமல் மாற்றத்திற்காய் முயல்வது எவ்வளவோ மேல்…! ஆகவேதான் இந்த வலைப்பதிவு.
நான் உங்களுடம் இருந்தது ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறேன், நான் விடும் பிழைகளை தயவுசெய்து சுட்டிக் காட்டவும். இதற்கு ஈடாக என்ன தருவேன்..?
- உங்களுக்கு ஒரு வலைப்பதிவு இருந்தால் அங்கு சில பின்னூட்டங்கள் போடுவேன். 🙂
- இல்லை, என்னால் முடிந்தால் பயனுள்ள விடையங்களை தமிழில் எழுதுவேன்…!
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
ஹாய் நிமல்,தமிழ் வலையிலகிற்கு வருக! வருக!,பல பதிவுகள் பதித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ஹாய் திவ்யா,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி…!//Divya said…ஹாய் நிமல்,தமிழ் வலையிலகிற்கு வருக! வருக!,பல பதிவுகள் பதித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//
நன்று.. நன்று… வேலைப்பளு அதிகம் என்று இடையில் விடாமல் தொடருங்கள்..
நன்றி பாவை…என்ன உங்களுக்கும் வேலை கூடவோ, கன நாளா பதிவு ஒண்டையும் காணம்… அல்லாட்டி படிப்பில மூழ்கினாச்சோ.. :)நீங்களும் எழுதுங்க…!
பிரிய நிமல்,நல்ல சிந்தனைகள் என்றும் நல்லவற்றையே தரும். உங்கள் தமிழறிவும் வளர்ந்து வலைப்பூவும் நறுமணம் வீச வாழ்த்துக்கள்.(நானும்தான் Private blog ஒன்றில் தமிழ் பழகுவதற்காக கண்டது கடியது எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறன்ப்ரியமுடன்,கௌபாய் மது.
நன்றி, "மாட்டுப்பையன்" மது அண்ணா…வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்…
ஹலோ நிமல்…….என்னாச்சு தமிழ் வலைதளம் ஒரு பதிவோடு நிக்குது??சீக்கிரம் புது பதிவு போடுங்க நண்பா!!!
ஹலோ திவ்யா…எதை எழுதுவது என்பதில் தான் குழப்பம்…(இந்த குழப்பம் அதிகம் தெரிந்தவர்களுக்கும் வரும், ஒன்றுமே தெரியாதவர்களுக்கும் வரும்.. :))சீக்கிரம் புது பதிவு போடுகிறேன் நண்பி!!!
வணக்கம் நிமல் வருக வருக என உங்களை வரவேற்கின்றேன்
வணக்கம் வந்தியத்தேவன்,வருகைக்கு நன்றி…!
வருக! வருக! தங்களுக்கே உரிய நகைச்சுவை ஒயிலாடும் வண்ணம் தமிழ்ப்பதிவுலகை அறிவு சார்ந்த ஆக்கங்களால் அலங்கரிக்க வேண்டுகிறேன்.
நன்றி ஆதித்தன்…இன்னும் உருப்படியா எண்டு எதையும் எழுதவில்லை… ஆனாலும் ஆசைதான்…!முயற்சிக்கலாம்… 😉
வருக! வருக!,வாழ்த்துக்கள்!!
நன்றி மங்களூர் சிவா…!
அடடே நிமலை அவருடைய முதல் பதிவிலிருந்து படித்திருக்கின்றேன் ஆனால் ஆளை இப்போதான் நேராகத் தெரியும்.