அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்

வணக்கம்,

இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்…

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.

அரங்கம் – The Arena
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, பொறாமை தொடர்பான ஒரு மர்ம கதை(?). இது பாடசாலை காலத்தில் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 30 நிமிட குறும்படம். ஆகவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

இயக்கம் : சுந்தரகுமார்
எழுத்து : நிஷாந்தனன்
படத்தொகுப்பு : கோகுல்
ஒளிப்பதிவு : தனுஷியன்
இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
தொழில்நுட்ப உதவி : நிமல் 😉
மேலும் … றோயல் கல்லூரி 2004 குழு தமிழ் மாணவர்கள் …!

இதுதான் எமது முதல் முயற்சி, ஒரு சிறு முயற்சி. ஆனாலும் அந்த முயற்சி ஒரு இனிய அனுபவம். இதன் முன்னோட்டத்தை இங்கு காண்க.

(முழுவதையும் தரவேற்ற போதிய தரவேற்றவேகம் (?)(uploading speed) இல்லை… முயற்சிக்கிறேன்…!)

அடுத்த பதிவில் ‘இருண்டு போன இதயங்கள்‘ பற்றி பார்க்கலாம்.
(அடுத்த பதிவு இங்கே)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

11 replies on “அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்”

 1. டைட்டில்ஸ் க்கு நடுவிலேயே கதையை நகர்த்தியிருக்கும் முயற்சி அபாரம்,

  ‘இன்ஸ்பெக்டராக’ ஷேர்ட் கையை மடக்கி வைத்துக்கொண்டு வருபவர் நன்றாக இருக்கிறார், நடிப்பிலும் தோற்றத்திலும்!

  கொழும்பு தமிழில் உரையாடல்கள் கேட்க அருமையாக இருக்கிறது!

 2. நன்றி திவ்யா,இது முன்னோட்டம் மட்டும் தான்…முழுவதையும் தரவேற்ற போதிய தரவேற்றவேகம் (uploading speed) இல்லை… :(முயற்சிக்கிறேன்…!

 3. இலங்கைத் தமிழைக் கேக்க நல்லாயிருக்கு. நீங்க குறிப்பிட்ட பகீயின் ஊரோடி இடுகையைப் பார்த்தேன். அங்கே கதைக்கிற இந்தியத் தமிழ் அந்நியமாக கிடக்குது. காதலிலும் சரி நட்பிலும் சரி இந்தியத் தமிழை கதைக்கிறமா? சும்மா எங்கயாவது "ஏய்..நாம செய்துட்டமில்ல" எண்டு இடக்கிட பம்பலடிக்கிறதோட சரி.நல்லாயிருக்கு படம். இப்பிடி முடியுமெண்டா நிறையப் படங்காட்டுங்கோ.

 4. அருமையா முயற்சி நிமல் அருமையாக இருக்கிறது பதிவேற்றியமைக்கு நன்றிகள்

 5. நிமல் இப்பதான் பாக்க முடிஞ்சுது. நல்லா இருக்குது.தொடர்ந்து தமிழில் வலைப்பதிய வாழ்த்துக்கள்..

 6. நிமல் உங்களது பதிவை பார்த்தேன். அனைத்துக் குறும்படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. பாடசாலை மாணவர்களால் எடுக்கப்பட்டது என்பதை நம்பச் சற்றுக் கடினமாக இருக்கின்றது. இதே முயற்சியைத் தொடர்ந்தால், அருமையான படங்களைத் தயாரிக்கும் நிலையை அடைவீர்கள்.

  x-group சொன்னவற்றில் நியாயம் இருப்பதாகவேபடுகின்றது. பாடசாலை மாணவர்களாலேயே இவ்வளவு அருமையான படங்களைத் தயாரிக்க முடியுமாக இருக்கும் போது, பல்கலைக்க்ழக மாணவர்கள் கேவலமான படங்களத் தயாரிப்பது என்பது அவர்களின் பிரச்சனை வேறு ஏதோ என எண்ணத்தோன்றுகின்றது.

  ஒருவேளை நிசாந்தன் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால், நிலமை வேறாக இருந்திருக்கலாம். நல்ல பலவிடயங்களை விஞ்ஞானபீடத்திடமிருந்து எதிர்பார்த்திருக்க முடியும். ஒரேவிதமான சிந்தனையை உடைய கூட்டம் ஒன்று சேர்ந்தது தான் இவ்வளவிற்கும் காரணமோ என எண்ணத்தோன்றுகின்றது. கொஞ்ச பேர் சேர்ந்து ஒரு பீடத்தின் பெயரையே நாறடித்து விட்டார்கள். இதில் என்ன சோகம் என்றால், அவர்களுக்கு அது எப்போதுமே விளங்காது என்பதுதான்.

  கூட்டமாக இருந்து யோசித்து, இதைவிட கேவலமான விடயம் ஒன்றை மீண்டும் செய்வார்கள் என்பதை நாம் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

  உங்களது முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. மேன்மேலுமான உங்களது முயற்சிகளுக்கு கல்வி தடையாக இருந்துவிடக்கூடாது. இவ்வாறான விடயங்களுக்கு என்று குறிப்பிட்டளவு நேரம் ஒதுக்கி அவற்றைத் தொடருங்கள். அதிலிருந்தாவது மற்றயவர்கள் ஏதாவது கற்றுக்கொள்கிறார்களா எனப் பாப்போம்.

  மாணவன்
  கொழும்பு பல்கலைக்கழகம்

 7. Anonymous (மாணவன், கொழும்பு பல்கலைக்கழகம்)…உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி…!//ஒருவேளை நிசாந்தன் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால், நிலமை வேறாக இருந்திருக்கலாம்.//இருந்திருக்கலாம்…!!!எம்மை நாம் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பதில்தான் எமது வெளிப்பாடுகள் அமையுமென்று நான் எண்ணுகிறேன்.மாற்றங்களுக்காய் முயற்சிப்போம்…!

Comments are closed.