நேர்முகத் தேர்வு – சில குறிப்புக்கள்

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.) தயார்ப்படுத்தல்: உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது.  கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம். ஆராய்ச்சி: நீங்கள் செல்ல இருக்கும் நிறுவனத்தையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கவும். இதற்கு அவர்களின் இணையத்தளம் மற்றும் முக்கியமாக அங்கு ஏற்கனவே […]

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…! இண்டைக்கு சும்மா கன நாளைக்கு பிறகு பேஸ்புக்/மூஞ்சிப்புத்தகம் (Facebook) பாத்துக்கொண்டிருக்கிருந்தேன். திடீரெண்டு ஒரு பக்கத்தில நல்லூர் கந்தன் முகப்பு படம். என்னடா எண்டு பாத்தால் கீழ நான் பாத்துக்கொண்டிருந்த படத்துக்கு முன்னேஸ்வரம் என்பது டிஸ்கிரிப்ஷனாக இருந்தது. (படத்தில கிளிக்கினால் பெருசா பார்க்கலாம்) Facebook Ads என்பது தொடர்புடைய (related) விளம்பரங்களை காட்டும். அந்த வகையில் முன்னேச்சரத்திற்கு நல்லூர் ஒரு கோவில் என்றவகையில் தொடர்புபட்டவைதான். அவ்வாறேனில் Facebook க்கு தமிழ் தெரியுமா? எல்லாம் […]

பரீட்சார்த்த ஒலிபரப்பு

இந்த வலைப்பதிவு தொழில்நுட்ப பரீட்சார்த்தங்களை நிகழத்திப்பார்க்கும் ஒரு சோதனைக்களம். பதிவுகள் ஒழுங்கின்றி இற்றைப்படுத்தப்படும். உங்கள் வலைத்திரட்டிகளில் இருந்து இந்த பதிவை நீக்குவது தேவையற்ற பரீட்சார்த்த பதிவுகளை வாசிப்பதை தவிர்க்க உதவும். நன்றி.

பழம் தமிழ் எழுத்துருக்கள்

ஒரு தொடர் எழுதுவதற்காக முன்னர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய தாள் கிடைத்தது. பாடசாலை நாட்களில் நானும் நண்பன் ராமும் குறியீட்டு முறையில் எழுத பயன்படுத்திய reference தாள் அது. ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து பிரதி பண்ணி வைத்திருந்தோம். பழம் தமிழ் எழுத்துருக்கள் அவை. எப்படி எழுதுவது என தெரியாவிட்டாலும், நாமாக ஒரு முறைக்கு எழுதப்பழகி ‘இரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு’ [:)] பயன்படுத்தி வந்தோம். சரி பதிவுக்கு வருவோம்… பெருசா ஒண்டுமில்ல…. […]

போய்வருக தோழனே!

நீ மறைந்த சேதி கேட்டு நெஞ்சுடைந்தது! நீ கலந்த நினைவுகளில் கண்கசிந்தது! நீ கதைத்த கதைகள் எல்லாம் காதில் கேக்குது! உன் தோளில் கிடந்த எந்தன் கைவலிக்குது! பூமலரும் உன்சிரிப்பை விதி அழித்ததா? பண்பினிலெ சிறந்த உன்னை நாம் இழப்பதா? பழகிவிட்ட நெஞ்சமுன்னை எண்ணி வாடுது! விலகிவிட்ட உன்னுயிரின் பின்னேஓடுது! விழிவழிய மனமழுது விண்ணைப் பார்க்குது! எழுதவரும் கவிதையிலென் கண்ணீர் சேருது! நீ் வளர்த்த நட்புஎன்ற பசுமை சிரித்திடும்! நீங்கிடாது உன்நினைவு! எம்முள் நிலைத்திடும்! போய்வருக தோழனே! […]