கொப்ஸ் துறைமுகம், நம்புகா ஹெட்ஸ், போர்ட் மகுவாறி, தாரே. இரண்டாம் நாள் பயணித்த தூரம் 505கிமீ, இரண்டு நாட்களில் பயணித்த மொத்த தூரம் 802கிமீ.
Category Archives: பயணம்
ஒரு பயணத்தின் படக்கதை – கிறாப்டன்
பயணத் திகதி: நவம்பர் 22, 2010 கிறாப்டன் கிளரன்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம். 1855ம் வருடம் அமைக்கப்பட்ட இந்நகரம் இந்த பிரந்தியத்தின் ஆரம்ப குடியேற்றங்களாலும் இன்றும் இருக்கும் பல பழைய கட்டடங்களாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பிரந்தியத்தின் பிரதான விமான நிலையமும் கிறாப்டனிலேயே அமைந்துள்ளது. யாம்பாவிலிருத்து பசிபிக் நெடுஞ்சாலையில் 60கிமீ தெற்காக பயணித்து கிறாப்டன் நகரை அடையும் போது நேரம் பகல் 12மணி. இங்கு பார்கக்கூடய இடங்களைப் பற்றி அறிவதற்கு பயணிகள் தகவல் […]
ஒரு பயணத்தின் படக்கதை – யாம்பா
யாம்பா, பலீனாவிலிருது தெற்காக உள்ள ஒரு சிறு துறைமுக நகரம். பசிபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 80கிமீ பயணித்து, யாம்பா றோட் வழியாக கிழக்காக 15 கிமீ பயணித்தால் யாம்பா நகரை அடையலாம்.
ஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்
எமது பயணத்தின் முதல் நாளில் நாம் சென்ற முக்கியமான ஊர் நிம்பின். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரபலமான பைரன் குடாவிலிருந்து 70 கிமீ மேற்காக அமைந்துள்ளது. நிம்பின் தொழிற்துறை ரீதியாக பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு கிராமமாக திகழ்கிறது.
ஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள்
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்னுக்கு சென்ற road trip பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஏற்கனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதால், அந்த பயணத்தின் போது எடுத்த படங்களை ஒரு தொடராக இடுகிறேன்.