ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்

கடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர், 7ம் நாளான இன்று மெல்பேர்ன் நோக்கி எமது பயணத்தை மீள ஆரம்பித்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்

பயணத் திகதி: நவம்பர் 24, 2010 இன்று நீல மலைத்தொடர் (Blue Mountains) பகுதிக்குச் செல்வதாக நேற்றே முடிவு செய்திருந்தாலும் எங்கே என்பதைத் திட்டமிடவில்லை. காலை 8 மணியளவில் அருணன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஜினோலன் குகைகளுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். நடுவழியில் GPS தன் விருப்பத்துக்கு குழறுபடி செய்து ஒரு நெடுச்சாலையின் நடுவில் குகை இருக்கிறது என்று சொன்னது. பின்னர் ஒருவாறாக சரியான பாதையைத் தெரிவு செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். நாம் பயணித்த Great Western Highway […]

ஒரு பயணத்தின் படக்கதை – நியூகாசில்

பயணத் திகதி: நவம்பர் 23, 2010 நெல்சன் குடாவிலிருந்து 50கிமீ தெற்கே உள்ள நியூகாசில் (Newcastle), நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னிக்கு அடுத்த பெரிய நகரம். இது அவுஸ்திரேலியாவின் பழைய நகரங்களில் ஒன்றாக இருப்பதுடன் இன்றும் பழைமை மாறாத ஒரு நகரமாகவும் இருக்கிறது. இங்கு அதிகளவான பழைய கட்ட்டங்கள் இன்னமும் பாவனையில் இருப்பதுடன், புதிய உயர் மாடிக்கட்டங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. உலகிலேயே அதிக நிலக்கரி ஏற்றுமதி செய்யும் துறைமுகம் (Port of Newcastle) இங்கேயே […]

ஒரு பயணத்தின் படக்கதை – நெல்சன் குடா

நெல்சன் குடா டொல்பின், திமிங்கில பயணங்கள், அலைச்சறுக்கு முதலான நீர் விளையாட்டுக்கள், மீன்பிடி போன்ற செயற்பாடுளுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ஒரு நகரம்.

ஒரு பயணத்தின் படக்கதை – ஹண்டர் பிராந்தியம்

பயணத் திகதி: நவம்பர் 23, 2010 மூன்றாம் நாள் பனிக்குளிரில் முழுநிலா ஒளிர்ந்து கொண்டிருந்த அதிகாலை 4.30க்கு விடிந்தது. சற்றுத் தாமதித்தே புறப்படலாம் என்பதால் அன்று என்ன இடங்களைப் பாரக்கலாம் என்பதை முதல் நாள் சேகரித்திருந்த கையேடுகளில் இருந்து தெரிவு செய்தேன். காலை 5.45க்கு டாரியிலிருந்து தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் ஹண்டர் (Hunter) பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கலானோம். ஹண்டர் பிராந்தியம் அல்லது ஹண்டர் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் இந்த பகுதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலந்தின் சிட்னிக்கு […]