ப்ளாகரில் Gravatar…!

ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம். தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும். (வாசிக்க) Gravatar என்றால் என்ன ? நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். […]

பயர்பாக்ஸ்க்கு அகராதி

பயர்பாக்ஸ் அகராதி நீட்சி நண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம். வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன. மிக விரைவில் மேலதிக விபரங்களுடன் வருகிறேன். அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். 😉 எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில கோப்புக்களை பயன்படுத்தும் தேவையும் ஏற்படுவதுண்டு. இந்த தேவைக்காக இதுவரையும் நான் Explore2fs (தொ-1) (தொ-2) என்ற மென்பொருளையே பாவித்துவந்தேன். […]