வில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை

அனைவருக்கும் வணக்கம்,

கொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்

எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் (Leo Club of Colombo Circle) கல்வி, சிறுவர் நலன், முதியோர் நலன் சாரந்த பல சமூக சேவை செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே முக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்பாக உள்ளபோதும், இளைஞர்களாகிய எம்மால் பெரும் செயற்திட்டங்களுக்குரிய நிதியை திரட்டமுடிவதில்லை.


இதனால் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் எதிர்கால சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த தைப்பொங்கல் தினத்தன்று ஒரு திரைப்பட காட்சியை குத்தகைக்கு எடுத்து, அந்த காட்சியின் வருமானத்தை கழக செயற்பாடுகளுக்கு பயன்படுத்த இருக்கிறோம். அதற்கு உங்களிடமிருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

தற்போதைய நாட்டுசூழலுக்கும் பலரின் மனநிலைக்கும் பொருத்தமில்லாத ஒரு வேண்டுகோளாக இது இருந்தாலும், உங்களின் சுயவிருப்பின் பேரில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காட்சியிடல் விபரங்கள்:

 • திகதி: 14/01/2009 (தைப்பொங்கல் விடுமுறை)
 • நேரம்: காலை 10.30
 • இடம்: பிரீமியர் கொன்கோட் திரையரங்கு, தெகிவளை
 • திரைப்படம்: வில்லு
 • நுழைவுச்சீட்டு கட்டணம்: ரூ 400 (பல்கனி), ரூ 320 (ஓ.டி.சி.)

நுழைவுச்சீட்டுக்கள் பெற:

 • CD World, Wellawatte
 • Leo Mirunan – 077 6672043
 • Leo Mayuran- 077 2097240
 • Leo Thusy – 077 5024666
 • என்னிடமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான  நுழைவுச்சீட்டுக்கள் உள்ளன, வேண்டுவோர் 078 5301949 இல் என்னை தொடர்புகொள்ளவும்.

குறிப்புக்கள்:

 • கொழும்பிலுள்ள பதிவர்கள் வர இயலுமாயின் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஒரு எண்ணமும் உள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள், கேள்விகள் இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளலாம். (nimalaprakasan அற் gmailடெட்com)
 • இந்த தகவலை தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் எமது கழகத்தின் சமூக சேவை செயற்பாடுகள் பங்களிப்பை நல்குங்கள்.

பிற்சேர்க்கை (12-01-2009):

காட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.

பல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற்று gmail.com) தொடர்புகொள்ளவும்.

நுழைவுச்சீட்டுக்கள் ‘CD World, Wellawatta’ மற்றும் ‘Hotel Rolex Wellawatta’ ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.

அன்புடன்,
Leo நிமல்
Past Secretary – 2006/2007 – Leo Club of Colombo Circle
District Council Coordinator – 2008/2009 – Leo District Council 306B2

Tags: Colombo, Leo, Movie, Villu, Vijay, Social Service

ஒளிக் கீற்று

சூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான்.

எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம்.

முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி.

படம் 1, படம் 2 –

ஒளிக் கீற்றுடன் படம் –

பாடம் –

 1. http://photoshoptutorials.ws/photoshop-tutorials/photo-manipulation/ray-of-light.html
 2. http://www.tutorialwiz.com/rayoflight/

விரைவில் ஒரு உருப்படியான பதிவோடு சந்திக்கலாம்…  🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

குல்பி – குறும்டம்

என்னதான் தெரிந்த கதையானாலும் சில வேளைகளில் சொல்லப்படும் விதத்தாலேயே பிடித்துப் போவதுண்டு. YouTube தளத்தில் எழுமாற்று விதிகளுக்கு அமைவாக உலாவிக் கொண்டிருந்த போது இந்த குறும்படத்தை பார்க்க கிடைத்தது. புனே பல்கலை திரைத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த குறும்படத்தைப்பற்றி அறியமுடிந்தது, “‘KULFI’ awarded for The Best Music Score and The Best Cinematography. Directed by Tanmay Shanware. Music by Pankaj – Pushkar.“.

நானும் இந்த படத்தை ‘ரீ’ ராஜாவை போல தமிழில் ரீமேக்கலாம் என யோசித்துள்ளேன். 😉

Part 1:

Part 2:

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

இந்த சாமி, சாமியா? ஆசாமியா??

நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.

நேற்று ‘தனிமை’ போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.

இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது.

சாமி - ஆசாமி
மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.

கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம்.
சாமி - ஆசாமி

இதுதான் மூலப்படம்.
Lemography ஆசாமி

இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி… அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி…? சும்மா…!! 😉

கேடயக் குறிப்பு:

 1. பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான ‘திறமைகள்‘ எதுவும் இல்லை.
 2. நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
 3. ஆகவே, ‘நான் அவன்(ர்?) இல்லை…!’
 4. இது ‘கேடயக் குறிப்பு‘ இல்லை… 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது

PIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான்.

சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது
படத்தில இருக்கிறவர் பிறைதீசன். அவற்ற தனிமைய பற்றி தனிப்பதிவில பாக்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்