ஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு…

நண்பர்களுக்கு வணக்கம்,

பல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை.

ஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) இந்த பதிவில் எழுதுவது சாத்தயப்படாது என்றே நினைக்கின்றேன். அது போலவே பலரின் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதும் அவ்வப்போது தான் சாத்தியப்படலாம்.

ஆனாலும் ஒலியோடை பொட்காஸ்ட் பதிவை தொடர முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே அங்கு வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.

எனவே இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

நான் வாசிக்க விரும்பும் ‘சே’ – Che Guevara

இன்று தோழர் சே’யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார்.

சே குவேரா அல்லது ‘சே‘ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) எனக்கு முதலில் அறிமுகமாவது 1999-2000 ஆண்டுக்காலப்பகுதியில் தான். அப்போது தான் நான் மார்க்ஸிசம், சோசலிசம் போன்ற பலவற்றையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அக்கலப்பகுதியில் தான் இன்னொரு புரட்சியாளராக சே அறிமுகமாகிறார். அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களிலும் சே தொடர்பான பல தகவல்களை கேட்டும், வாசித்தும் அறிந்திருக்கிறேன்.

இத்தகைய பலதரப்பட்ட வாசிப்புக்கள் சே இன்னொரு புரட்சியாளர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்ற பிம்பத்தை என்னுள் உண்டாக்கின என்றே எண்ணுகிறேன். ஆனாலும் இன்று சே ஒரு வியாபார குறியீடாக (fasion icon) மாற்றப்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் எதிர்மறை விளைவு இவ்வாறானதாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே எனது அவா.

சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல பரிமாணங்களை கொண்டிருந்த சே பற்றி நான் தெரிந்து கொண்டுள்ளவை மிக சொற்பமே. அதனால் தான் சே பற்றி இன்னமும் வாசிக்க விரும்புகிறேன்…!

பி.கு: ப(சி)லர் தெரிந்து கொள்ள விரும்பிய என் குறுந்தாடிக்கான காரணத்தை இந்த பதிவு கொடுத்திருக்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பேப்பர்கள் – பரீட்சை – திரட்டி – மீண்டும் வருதல்

கடந்த இரண்டு மாதங்களாக பிற வேலைகள் சற்று அதிகம் இருந்ததால் பெரிதாக எதுவும் எழுத முடியவில்லை. (இல்லாட்டி மட்டும்??)

முன்குறிப்பு: பின்குறிப்பை வாசிக்கவும்

முதல்ல ஒரு பேப்பர் தரவேணும் எண்டு சொல்லிச்சினம். பேப்பர் தானே தினமும் வாசிச்சிக்கறம் எண்டால் அது research பேப்பராம், சும்மா எல்லாம் எழுதேலாதாம். ஐ3இ (IEEE) முறைப்படிதான் எழுதோணுமாம். சரியெண்டு ஒருமாதிரி ஏதோ எழுதினம். பிறகு சொல்லிச்சினம் ஒரு draft கொண்டுவாங்கோ எண்டு. சரியெண்டு எடுத்திட்டு போனா அதில ஏதோ சரி பிழை எல்லாம் சொல்லிச்சினம். எங்களுக்கிண்டா எதுவும் விளங்கேல்லை. பரவாயிலை எண்டு formatting மட்டும் மாத்தீட்டு குடுத்திட்டம், என்ன நடக்கும் எண்டு தெரியேல்லை.

அது முடிச்சா இன்னும் ஏதேதோ assignment எல்லாம் தந்திச்சினம். என்னெண்டு விளங்கிறது முக்கியமில்லை, submit பண்ணுறது தான் முக்கியம் என்ற பெரும் தத்துவத்தின்படி ஒருமாதிரி செய்து முடிச்சம்.

சரி எல்லாம் முடியுது எண்டு நினைக்க முதலே semester exams வந்திட்டுது. செமஸ்டரில assignments, papers, project work எண்டு சரியா படிக்க முடியேல்லை. (இல்லாட்டி மட்டும்??). சரியெண்டு சொல்லி ஒரு கிழமைக்கு “பரீட்சைக்கான கும்மி” ஏற்பாடு செய்து (இதப்பற்றி இன்னொரு பதிவில விளக்கமா எழுதலாம்), ஒருமாதிரி பரீட்சைகளும் நேற்றோடு முடிஞ்சுது. (இங்க பார்க்க: Done with Exams)


www.math.kent.edu/~white/ugcolloq/

இதுக்கிடையில சும்மா இருக்க கட்டாம நாமளும் ஒரு திரட்டி செஞ்சா என்ன எண்டு நினைச்சு தொடங்கினது தான் http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/. இதுவரை எதுவும் உருப்படியா செய்ய முடியேல்லை. இனித்தான் எதாவது செய்யோணும்.

இனி கொஞ்சம் நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுதுவம். உருப்படியா எழுத ஆசைதான், ஆனா ஏனே முடியிறதில்லை. முயற்ச்சிக்கலாம்.

பின்குறிப்பு:
பேச்சு வழக்கில் எழுத ஒரு முயற்சி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை என்பது எனக்கே உணரக்கூடியதாக இருக்கிறது. புரியாதவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கேட்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்