ஒளிக் கீற்று

சூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான். எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம். முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி. படம் 1, படம் 2 – ஒளிக் கீற்றுடன் படம் – பாடம் – http://photoshoptutorials.ws/photoshop-tutorials/photo-manipulation/ray-of-light.html http://www.tutorialwiz.com/rayoflight/ விரைவில் ஒரு […]

இந்த சாமி, சாமியா? ஆசாமியா??

நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும். நேற்று ‘தனிமை’ போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன். இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது. மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) […]

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது

PIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான். சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….

பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம், நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!) ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை. வீட்டு குளியலறை. இரவு 10 மணி […]