Ritu (2009) – வாழ்க்கையின் பதிவுகள்

நான் அண்மையில பார்த்த ஒரு மலையாள மொழி திரைப்படம் Ritu (பருவகாலம்). பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம், வாழ்க்கையின் பல பருவங்களில் மாறிச்செல்லும் மூன்று நண்பர்களின் கதைகளை சொல்லிச் செல்கிறது. மகிழ்ச்சி, சோகம், நட்பு, காதல் என்று பல உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு திரைப்படமாகவே நான் இதை பார்க்கிறேன்.

Ritu (2009)

சிறுவயது முதலாக நட்பாக இருக்கும் Sarath Varma, Varsha John மற்றும் Sunny Immatty. மூவரும் ஒன்றாக படித்து IT துறையில் வேலை செய்பவர்கள். கல்லூரி வாழ்க்கையின் பின்னர் ஷரத் அமெரிக்கா சென்றுவிட, மற்ற இருவரும் பெங்களூரில் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஷரத் தன் நண்பர்களோடு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கும் நோக்கில் மூன்று வருடங்களின் பின் திரும்பிவருகிறான். ஆனால் இந்த கால இடைவெளி அவர்களின் நட்பில் பல மாற்றங்கள். சொல்லாத காதல், மாறிய நட்பு, நண்பனின் துரோகம் என்று பல பரிமாணங்களில் செல்கிறது கதை.

நாம் எதை துரத்தி எதை இழக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த திரைப்படம்.

பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)

நான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல).

Just for my personal reference…!

விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave முடிவை விட Vinnaithaandi Varuvaayaa முடிவுதான் பிடித்திருத்தது. படம் பிடித்திருந்தது…! (9/10)

ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) – தமிழில் நான் பார்த்த படங்களில் மிகவும் வித்தியாசமான படங்களில் ஒன்று, (தமிழில்…!). முக்கியமாக ஒளிப்பதிவும் இசையும். படம் பார்த்து முடித்த பின் எழுத்திலே கொண்டுவர முடியாத ஒரு உணர்வு. இப்படியான படங்கள் இனியும் வரவேண்டும். படம் பிடித்திருந்தது. (9/10)

தமிழ் படம் (Thamizh Padam) – புது முயற்சி. முடிவிலே திகட்டினாலும், மொத்தத்தில் சூப்பர். நல்ல இசை, ‘ஒமகசீயா’ பாடலும் தான். படம் பிடித்திருந்தது. (8/10)

கோவா (Goa) – நாம் பொதுவிலே பேச மறுக்கும், ஆனால் ‘கலாச்சாரத்துக்கு புதிது அல்லாத’ உறவு முறைகளை சாதாரணமாக காட்சிப்படுத்தியிருந்தது. நல்ல நகைச்சுவை, நல்ல இசை, நல்ல பொழுதுபோக்கு படம். படம் பிடித்திருந்தது. (7/10)

புகைப்படம் (Pugaippadam) – இந்த வருடம் வெளியான, நான் பார்த்த முதல் தமிழ்ப்படம். வித்தியாசம் என்று எதுவும் இல்லாத கதை, புதிய நடிகர்கள். காலத்தால் சற்று பிந்திய, இனிய இசை. இன்றைக்கும் என் பயணங்களில் நான் கேட்கும் ‘இது கனவோ’ பாடல். முடிவில் கொஞ்சம் சொதப்பல். படம் பிடித்திருந்தது. (7/10)

குட்டி (Kutty) – சுமாரான கதை, நல்ல நகைச்சுவை. (பார்க்கும் போது) படம் பிடித்திருந்தது. (இப்போது) படம் பரவாயில்லை. (6/10)

தீராத விளையாட்டு பிள்ளை (Theeradha Vilaiyattu Pillai) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். சுமாரான நகைச்சுவை, சுமாரான பாடல்கள், நல்ல பாடல் காட்சிகள். படம் பரவாயில்லை. (5/10)

கச்சேரி ஆரம்பம் (Kacheri Arambam) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். படம் பரவாயில்லை. (5/10)

(பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்)

வில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை

அனைவருக்கும் வணக்கம்,

கொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்

எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் (Leo Club of Colombo Circle) கல்வி, சிறுவர் நலன், முதியோர் நலன் சாரந்த பல சமூக சேவை செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே முக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்பாக உள்ளபோதும், இளைஞர்களாகிய எம்மால் பெரும் செயற்திட்டங்களுக்குரிய நிதியை திரட்டமுடிவதில்லை.


இதனால் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் எதிர்கால சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த தைப்பொங்கல் தினத்தன்று ஒரு திரைப்பட காட்சியை குத்தகைக்கு எடுத்து, அந்த காட்சியின் வருமானத்தை கழக செயற்பாடுகளுக்கு பயன்படுத்த இருக்கிறோம். அதற்கு உங்களிடமிருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

தற்போதைய நாட்டுசூழலுக்கும் பலரின் மனநிலைக்கும் பொருத்தமில்லாத ஒரு வேண்டுகோளாக இது இருந்தாலும், உங்களின் சுயவிருப்பின் பேரில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காட்சியிடல் விபரங்கள்:

 • திகதி: 14/01/2009 (தைப்பொங்கல் விடுமுறை)
 • நேரம்: காலை 10.30
 • இடம்: பிரீமியர் கொன்கோட் திரையரங்கு, தெகிவளை
 • திரைப்படம்: வில்லு
 • நுழைவுச்சீட்டு கட்டணம்: ரூ 400 (பல்கனி), ரூ 320 (ஓ.டி.சி.)

நுழைவுச்சீட்டுக்கள் பெற:

 • CD World, Wellawatte
 • Leo Mirunan – 077 6672043
 • Leo Mayuran- 077 2097240
 • Leo Thusy – 077 5024666
 • என்னிடமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான  நுழைவுச்சீட்டுக்கள் உள்ளன, வேண்டுவோர் 078 5301949 இல் என்னை தொடர்புகொள்ளவும்.

குறிப்புக்கள்:

 • கொழும்பிலுள்ள பதிவர்கள் வர இயலுமாயின் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஒரு எண்ணமும் உள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள், கேள்விகள் இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளலாம். (nimalaprakasan அற் gmailடெட்com)
 • இந்த தகவலை தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் எமது கழகத்தின் சமூக சேவை செயற்பாடுகள் பங்களிப்பை நல்குங்கள்.

பிற்சேர்க்கை (12-01-2009):

காட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.

பல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற்று gmail.com) தொடர்புகொள்ளவும்.

நுழைவுச்சீட்டுக்கள் ‘CD World, Wellawatta’ மற்றும் ‘Hotel Rolex Wellawatta’ ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.

அன்புடன்,
Leo நிமல்
Past Secretary – 2006/2007 – Leo Club of Colombo Circle
District Council Coordinator – 2008/2009 – Leo District Council 306B2

Tags: Colombo, Leo, Movie, Villu, Vijay, Social Service