IPv6: மாற்றமே மாறாதது

இது இன்றைய வானொலி நிகழ்ச்சிக்காக தயாரித்த ஒரு பகுதி. ஒலிபரப்பான அங்கத்தை இங்கு கேட்கலாம். இணைய வலையமைப்பில் ஒரு உலகளாவிய மாற்றம் இந்த வாரம் ஆரம்பமாகியிருக்கிறது. IPv6 அல்லது Internet Protocol version 6 எனப்படும் இணைய தொடர்பாடல் தரமுறையின் பயன்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றத்தை பற்றியும் அதன் பின்னணியையும் இதன் தாக்கங்களையும் இன்றைய அறிந்ததும் அறியாததும் பகுதியில் இங்கு பார்க்கலாம். IPv6 பற்றி பார்ப்பதற்கு முன்னர் IP எண்கள் என்றால் என்ன என்று தெரிந்து […]

புத்தம் புதுசு – Facebook Chat

பலராலும் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Facebook Chat, இப்போது பொதுப்பாவனைக்கு விடப்பட்டுள்ளது. ஜிமெயில் சாட்டை போலவே இருந்தாலும் Facebook நண்பர்களுடன் உரையாட பயனுள்ளதாக இருக்கும். கூகுளின் ஓர்கூட்டிலும் விரைவில் இவ்வாறான வசதி வழங்கப்படலாம். அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

ப்ளாகரில் Gravatar…!

ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம். தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும். (வாசிக்க) Gravatar என்றால் என்ன ? நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். […]

பயர்பாக்ஸ்க்கு அகராதி

பயர்பாக்ஸ் அகராதி நீட்சி நண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம். வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன. மிக விரைவில் மேலதிக விபரங்களுடன் வருகிறேன். அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். 😉 எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில கோப்புக்களை பயன்படுத்தும் தேவையும் ஏற்படுவதுண்டு. இந்த தேவைக்காக இதுவரையும் நான் Explore2fs (தொ-1) (தொ-2) என்ற மென்பொருளையே பாவித்துவந்தேன். […]