டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்

[via: HTML aware Twitter] டுவீடர், ஒருவகையான கும்மி சேவை என்று சொல்ல்லாம். மனதில் நினைத்த எதையும் 140 எழுத்துக்களில் சொல்லமுடிந்தால் சரி. டுவீட்டரில் நாம் இடும் தகவல்களை எமது வலைத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ காட்டுவதற்கு டுவீட்டர் நிரல்களை  (பிளாகருக்கான பட்டை) பயன்படுத்தலாம். எனினும் அவற்றிற்கு HTML சொல்லிக் கொடுக்கப்படவில்லை. டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் நாம் இடும் சுட்டிகள் சுட்ட கூடியவையாகவும் (), @நண்பர்கள் (ex:- talkout – @talkout) அவர்களின் பக்கத்திற்கான சுட்டியாகவும் மாறுவதை காணலாம். […]

உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள் அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.(அத தான் தினமும் செய்யுறமில்ல…) மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest. இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் 😉 அன்புடன்,நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன் — This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 […]

ஜிமெயிலில் தமிழ்மணம் – Gmail Web Clips

‘ஜிமெயில் வெப் கிளிப்ஸ்’ முகப்பு பக்கத்தில் RSS/Atom வகையான ஓடைகள்(feeds) மூலம் தலைப்புச்செய்திகள், வலைப்பதிவுகள், விளம்பரங்கள் போன்றவற்றை காட்ட பயன்படும் ஒரு வசதி ஆகும். இவை உங்களின் இன்பாக்ஸிலுள்ள மின்னஞ்சல்களுக்கு மேலாக காட்டப்படும். (படம் – 1) இயல்பிருப்பாக சில செய்தி ஓடைகள் இதில் காட்டப்படும். எனினும் இவற்றை உங்கள் விருப்ப தேர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் வசதி ஜிமெயிலில் வழங்கப்படுகிறது. ‘Settings’ -> ‘Web Clips’ என்று தெரிவுசெய்தால் காட்டப்படும் ஓடைகளின் பட்டியல் தோன்றும் […]

தமிழில் Gmail

Gmail இடைமுகம் ஏற்கனவே பல மொழிகளில் உள்ளது பலரும் அறிந்ததே. இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே இதுவரை இருந்தது. கூகிளின் பிரபலமான இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின்(Gmail) இடைமுகம் இப்போது தமிழ் உட்பட அனேக இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் (Tamil) உட்பட اردو (Urdu) , मराठी (Marathi), हिन्दी (Hindi), বাংলা (Bangla), ગુજરાતી (Gujarati), ଓଡିଆ (Oriya), , తెలుగు (Telugu), ಕನ್ನಡ (Kannada) மற்றும் മലയാളം (Malayalam) ஆகிய மொழிகளில் இப்போது […]

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது. பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம். Google Docs பக்கத்திற்கு சென்று New->Spreadsheet தெரிவு செய்யவும். விரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும் (Save). Share ஐ அழுத்தவும். […]