நிமலின் பதிவு

Icon

என் எண்ணங்கள்… என் தமிழில்…

கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!

இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.

ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.

இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்:

டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்

[via: HTML aware Twitter]

டுவீடர், ஒருவகையான கும்மி சேவை என்று சொல்ல்லாம். மனதில் நினைத்த எதையும் 140 எழுத்துக்களில் சொல்லமுடிந்தால் சரி. டுவீட்டரில் நாம் இடும் தகவல்களை எமது வலைத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ காட்டுவதற்கு டுவீட்டர் நிரல்களை  (பிளாகருக்கான பட்டை) பயன்படுத்தலாம். எனினும் அவற்றிற்கு HTML சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் நாம் இடும் சுட்டிகள் சுட்ட கூடியவையாகவும் (), @நண்பர்கள் (ex:- talkout@talkout) அவர்களின் பக்கத்திற்கான சுட்டியாகவும் மாறுவதை காணலாம். ஆனால் இந்த வசதி டுவீட்டரில் நிரல்களில் இல்லை.

இதை செய்வதற்கு பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை. உங்களின் டுவீட்டர் நிரலுக்கு கீழே இந்த நிரலை சேர்த்தால் சரி.

<script type='text/javascript'>   document.getElementById('twitter_update_list').innerHTML      = document.getElementById('twitter_update_list').innerHTML.replace(      /([^\"\'](https?:\/\/([-\w\.]+)+(:\d+)?(\/([\w/_\.]*(\?\S+)?)?)?))/g,      ' <a href="$2">$2</a>');   document.getElementById('twitter_update_list').innerHTML      = document.getElementById('twitter_update_list').innerHTML.replace(      /@([a-zA-Z]+)/g,'@<a href="http://twitter.com/$1">$1</a>');</script>


இதை முயற்சித்து பார்க்கவும். சரியாக வேலை செய்யாவிட்டால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். இதன் செயற்பாட்டை இங்கு பார்க்கலாம்.

நன்றி:
சேனக பெர்ணான்டோHTML aware Twitter

கேடயக்குறிப்பு: 
இதை சேர்ப்பதால் உங்களுக்கு அல்லது உங்கள் வலைப்பதிவிற்கு ஏற்படக்கூடிய உடல், உள பிரச்சனைகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Internet, Twitter, HTML, regular expression, இணையம், டுவீட்டர்

PDF கோப்புக்களில் வைரஸ்: கவனம்!!!

வைரஸ் தொல்லை நம்மில் பலருக்கு தினசரி தலையிடியை கொடுக்கும் ஒரு பிரச்சினை. முக்கியமாக விண்டோஸ் பயனர்களுக்கு இது தாங்க முடியா தலையிடி தான். இதுவரை காலமும் நாம்  இணையத்தில் தரவிறக்கும் மென்பொருள்கள், மின்னஞ்சலில் வரும் கோப்புக்கள், மற்றும் சொருவிகள் என்று நான் சொல்லும் USB Thumb Drives போன்றவற்றின் மூலமே பரவி வந்தது.

ஆனால் இப்போது பல புதிய நச்சுநிரல் எழுதுபவர்கள் PDF கோப்புக்களை இவற்றிற்கு ஊடகமாக பயன்படுத்துவதாக கூறப்படும். PDF கோப்புக்கள் இன்றய காலகட்டத்தில் பல தேவைகளுக்காகவும் பொதுவாக பயன்படுத்தப்படுவதால் இதன் மூலம் வைரஸ்களை பரப்புவது அதிகரித்துள்ளது.

எனவே உங்களுக்கு வரும்  PDF கோப்புக்கள் தொடர்பில் கவனமாக இருக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு:
TrustedSource Blog
கணினி நச்சுநிரல்

கவனம்!!!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: இணையம், கணனி, வைரஸ், Internet, virus, pdf files