அண்மைக்காலமாக பதிவுகள் எழுத நேரமும் இல்லை, எண்ணமும் இல்லை. ஆனால் நண்பன் சாய் சிவாவின் இந்த பாடலை கேட்டதிலிருந்து இதை பதிவில் பகிரவேண்டும் என்று தோன்றியது. பாடலை கேட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்….
சந்திரபாபு தமிழ் திரைத்துறையின் ஒரு பன்முக கலைஞன். ஒரு நகைச்சுவை நடிகன் என்ற பரிமாணத்துக்கு அப்பாற்பட்டு இன்னும் பல திறமைகளை தன்னுள் கொண்டிருந்த ஒரு திறமைசாலி. முக்கியமாக சந்திர பாபு பாடியுள்ள பாடல்கள் சிறப்பானவை. அவற்றின் இசை மற்றும் இதர விடையங்களை காட்டிலும் முக்கியத்துவம் பெறுவது, கருத்தாளம் மிக்க வரிகளும் சந்திர பாபுவின் குரலுமே.
எனக்கு பிடித்த சந்திர பாபு பாடல்களில் முதன்மையானது ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’. அந்த பாடல் வரிகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை
பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்
பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை
கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் மனதில் யார் வருவார்
யாரை பார்த்து அழைப்பாள்?
தமிழ் ராப் (சொல்லிசை)பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு (முடிந்தால் தொடர் பதிவுகள்).
தமிழில் ராப் இசைவடிவத்தை யார் முதலில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாற்று ஆராய்ச்சி இங்கு தேவையற்றது, சமகால ராப் பாடல்களை உதாரணமாக கொண்டே இந்த பதிவை எழுதுகிறேன். (ஆகவே இதை selective என்றும் சொல்லலாம் அல்லது filtering என்றும் சொல்லலாம்). இங்கு நான் ராப் பாடல்கள் என்பது ‘முழுமையான’ ராப் பாடல்கள், ஆங்காங்கே நான்கு வரி ராப் ‘தூவப்பட்ட’ பாடல்கள் அல்ல.
காதல் பாடல்கள் என்பது திரை இசை பாடல்களிலும் பிற தமிழ் பாடல்களிலும் மிகவும் அதிகமாக வரும் பாடல்கள் எனலாம். இப்பாடல்களின் வரிகளும் உணர்வுகளுமே அவற்றை முழுமையான காதல் பாடல்களாக ஆக்குகின்றன. இவ்வாறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் காதல் பாடல்களை ராப் இசை வடிவில் கொடுக்க முடியுமா? முடியும் என்பதற்கான சில உதாரணங்களை காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.
1. காதல் கடிதம்
பாடியோர் : கிரிஷான் மகேசன், யௌவனன் (இலங்கை) இசைத்தொகுப்பு : Asian Avenue
காதலை சொல்லும் வரிகள். வரிகளில் தெளிவும் எளிமையும். பாடும் வரிகள் புரிகின்றன. ராப் பாடல்களின் சிறப்பு பாடுபவர்களே வரிகளை எழுதுவது. தங்களின் வரிகளை தாங்களே பாடுவது. உச்சரிப்பில் குறை எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆங்கிகலப்பு சற்றும் இல்லை, ஆனாலும் கேட்பதற்று நன்றாகவே இருக்கிறது.
டியூனுக்குள் அடக்க ஆங்கில சொல் சேர்ததாக கூறும் திரை கவிஞர்கள் இதை கேட்டு பார்க்கலாம்.
‘உன் கண்ணில் மர்மமோ, ஒரு பார்வையில் கவர்ந்தாய் தர்மமோ…’ ‘நீ எனை அறியாய், என்னைப்பற்றி தெரியாய், உன் மேல் நான் கொண்ட நேசம் பற்றி தெரியாய்…’
தமிழ் திரை பாடல்களை கேட்பவர்களுக்கு அறிமுகமான மூவர். தமிழ் ராப் பாடல்கள் இப்படியும் இருக்கலாம் என்று செய்து காட்டியவர்கள். முக்கியமாக Dr Burn தமிழ் வரிகளை சிறப்பாக கையாள்வதாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் சற்றே ஆங்கில கலப்பு இருத்தானும், விகுதிக்கு மட்டும் தமிழ்தடவி எழுதும் கவி அரசுகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
‘பெண்ணே என் மனதில் காயம், எல்லாத் நீ செய்த பாவம், காதல் என்ற வார்த்தை மாயம், உன் காதல் எங்கே பெண்ணே நீ சொல்ல வேண்டும்…’
யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பில் ராப் பாடல் கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பாட்டு நிச்சயம் பிடிக்கும். வரிகள் சில இசைக்குள் புதைந்துவிடுகின்றன். வரிகள் சற்று பொதுவானவையாக இருக்கின்றன. ஆனாலும் பாடல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. ராப் என்பது தமது எண்ணங்களை தமது வரிகளால் பாடுவது. அதற்கமைய இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது. உரில் அதிகம் காணும் பூவர மரத்தை பாடலில் கொண்டுவந்தது வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் பூவரசம் பூ எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
‘பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம்..’ ‘என்னத்த சொல்லி நான் என்னத்த செய்ய, காதல கடையில சொல்லவா செய்ய. பழம் நழுவி பாலில் விழும் எண்டு பாத்தா, பழம் இல்லாம பாலும் பழம் பாலா போச்சே…!’
இன்னும் எத்தனையொ தமிழ் ராப் காதல் பாடல்கள் இருக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் உணர்வுக்கும் மொழிக்கும் களங்கமில்லா தமிழ் ராப் பாடல்களை கொடுக்க முடியும் என்பதை சொல்லவே. ராப் பாடல்கள் எல்லாமே இவ்வாறு நல்லவை என்று சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நல்லவற்றை விடுத்து தீயவற்றை மட்டுமே வடிகட்டும் ‘திறனுள்ள’ அன்பர்களுக்கு, “நீங்கள் அப்படியே இருங்கள்…! ”. பாடல்களை கேட்டுப்பாருங்கள். கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறுங்கள். நான் தான் சரி என்றில்லை, ஆகவே எனது கருத்துக்களில் பிழை இருந்தால் கூறுங்கள். திருத்திக்க்கொள்கிறேன்.
மீண்டும் சந்திக்கலாம்…
அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
பி.கு : இந்தியாவிலிருந்து திரை இசை தவிர்த்த தமிழ் ராப் பாடகர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
Recent Comments