நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.
நேற்று ‘தனிமை’ போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.
இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது.

மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.
கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம்.

இதுதான் மூலப்படம்.

இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி… அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி…? சும்மா…!!
கேடயக் குறிப்பு:
- பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான ‘திறமைகள்‘ எதுவும் இல்லை.
- நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
- ஆகவே, ‘நான் அவன்(ர்?) இல்லை…!’
- இது ‘கேடயக் குறிப்பு‘ இல்லை…
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்


