![]()
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்? ஒரு சிறு அலசல்.
![]()
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்? ஒரு சிறு அலசல்.
இது இன்றைய வானொலி நிகழ்ச்சிக்காக தயாரித்த ஒரு பகுதி. ஒலிபரப்பான அங்கத்தை இங்கு கேட்கலாம்.
இணைய வலையமைப்பில் ஒரு உலகளாவிய மாற்றம் இந்த வாரம் ஆரம்பமாகியிருக்கிறது. IPv6 அல்லது Internet Protocol version 6 எனப்படும் இணைய தொடர்பாடல் தரமுறையின் பயன்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றத்தை பற்றியும் அதன் பின்னணியையும் இதன் தாக்கங்களையும் இன்றைய அறிந்ததும் அறியாததும் பகுதியில் இங்கு பார்க்கலாம்.

IPv6 பற்றி பார்ப்பதற்கு முன்னர் IP எண்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். எப்படி நாம் இரண்டு தொலைபேசிகளுக்கு இடையே தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் இருக்கின்றனவோ, அது போலவே இரண்டு கணனிகள் தம்மிடையே பேசிக் கொள்ள ஐபி எண்கள் பயன்படுகின்றன.
ஐபி எண்களுக்கான தற்போதைய தரமுறையான IPv4 1970களில் உருவாக்ப்பட்டது. 4.3 billion ஐபி முகவரிகளை இந்த தரமுறையில் கொடுக்க முடியும். ஒரு பரிசோதனையாக உருவாக்கப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை போதுமானதாகவே எல்லோரும் எண்ணியிருந்தனர். ஆனால் தொழில்நுட்பங்களில் எதிர்பாராத வளர்ச்சியும் அதிகப்படியானோர் இணையத்தில் இணையும் நிலையிலும் இந்த எண்ணிக்கை இப்போது போதுமானதாக இல்லை.
இதை சமாளிக்க NAT (Network Address Translation) போன்ற மாற்று வழிகள் இருந்தாலும் அவை ஓரு நிரந்தர தீர்வு அல்ல. இந்த சூழலில் 1990களில் இறுதியில் அறிமுகமாகிறது IPv6. இதன் முக்கிய அம்சம் இந்த முறையில் கொடுக்கங்கூடிய முகவரிகளின் எண்ணிக்கை 340 trillion trillion trillion. அதாவது 340ம் 36 பூச்சியங்களும்.
இதனால் யாருக்கு நன்மை?
இது நேரடியாக நமக்கு பெரியளவிலான நன்மைகள் எதையும் இப்போதைக்கு தரப்போவதில்லை. ஆனாலும் எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய தொழில்நுட்ப சாத்தியங்களுக்கு இது ஒரு முதல் படிக்கல்லாக அமைகிறது. கணனிகள், கைப்பேசிகள் மட்டுமன்றி வீட்டு இலத்திரனியல் உபகரணங்கள் வாகனங்கள் போன்றவையும் வலையமைப்பில் நேரடியாக இணையும் சாத்தியங்களையும் இது வழங்குகிறது.
இந்த மாற்றம் எப்போது தொடங்குகிறது, எப்போது முடியும்?
இது ஒரு சிறிய மாற்றம் அல்ல, உலகம் பூராவும் உள்ள இணைய வலையமைப்பின் கட்டமைப்புக்கள் முழுவுதும் இந்த புதிய தரமுறைக்கு மாற சில வருடங்களாவது காத்திருக்க வேண்டும். அதுவரை பழைய மற்றும் புதிய தரமுறைகள் சேர்ந்தியங்கும்.
இது தொடர்பில் நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?
பெரும்பாலான தற்போதைய கணனிகள் IPv6 தரமுறைக்கு ஆதரவு தருகின்றன. ஆனாலும் அவுஸ்திரேலியாவில் Internode தவிர்ந்த ஏனைய இணைய வழங்குனர்கள் யாரும் IPv6 மாற்றத்தை தொடங்கவில்லை. ஆகவே இப்போதைக்கு நாம் இந்த மாற்றம் நடக்கிறது, ஆரம்பித்துவிட்டது என்பதை அறிந்து கொள்வதை தாண்ணி எதையும் செய்யத்தேவை இல்லை.
கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.
எனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
உங்களின் கருத்து என்ன?
கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்….
ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை…
நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து கொள்ள இவர்களை பின்தொடருங்கள்…
திண்ணை 1:
(இது ஒரு இலங்கை திண்ணை, இன்னும் பலர் பரபர டுவீட்டர்களும் இங்கு உண்டு…!)
திண்ணை 2:
(இது ஒரு அரசியல் திண்ணை)
திண்ணை 3:
பரபர எழுத்தாளர் பா.ரா தலை(மை)யில் இயங்கும் வெண்பாம் இயக்கம். @nchokkan, @snapjudge, @icarusprakash, @gchandra, @elavasam இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள், பரபர பதிவர்கள், முன்னாள் பிரபல பதிவர்களும் இந்த திண்ணையில் அடக்கம்.
இவை போல இன்னும் எண்ணற்ற பல திண்ணைகள் இந்த டுவீட்டரில் இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிப் பார்க்கலாம். அதுவரை நீங்களும் இந்த திண்ணைகளில் பொழுது போக்கலாம்….!
—
பி.கு:
நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு(http://www.geocities.com/troyal20012001/) Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!
இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.
ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.
ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.
இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்: