[Update: மீண்டும் மீண்டு வருவோம், 2010இலிருந்து...! - 30-06-2009]
அனைவருக்கும் வணக்கம்,
தவிர்க்க முடியாத காரணங்களால் எமது ஒலியோடை பதிவை இந்த வருட இறுதி வரை வெளியிட இயலாது. எனினும் அடுத்த வருடத்திலிருந்து மீண்டும் புது பொலிவுடன் மீண்டு வருவோம்.
நன்றி.
மீண்டும் சந்திக்கலாம்,
ஒலியோடை குழு

எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஒலியோடை முதலாம் வாரத்தை விட சற்று நீண்டுவிட்டது. மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிப்பதிவு செய்ததை 16 நிமிடத்திற்கு குறைத்திருக்கிறோம். நீண்ட ஒலிப்பதிவுகளை நேயர்கள் பொறுமையுடன் கேட்பார்களா என்ற சந்தேகமே காரணம். இது தொடர்பிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். இந்தவார ஒலியோடையை பொறுமையுடன் கேட்கவும்…
கேட்க:
தரவிறக்க:
குறிப்புகள்:
இந்த பொட்காஸ்ட் பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களும் ஊக்குவிப்புக்களுமே இனிவருங்காலங்களில் எமது ஒலியோடையை மேலும் மெருகேற்ற உதவிபுரியும்.
மீண்டும் சந்திக்கலாம்.

ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்.
இது சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை பேரவாவுடன் எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களும் ஊக்குவிப்புக்களுமே இனிவருங்காலங்களில் எமது ஒலியோடையை மேலும் மெருகேற்ற உதவிபுரியும்.
கேட்க:
[10:30m]
தரவிறக்க:
குறிப்புக்கள்:
- தமிழ் நீட்சிகள்
- Adhiyan 3.0.2 by Gopi Thagadoor
- TamilVisai (TamilKey) 0.4.1 by Muguntharaj, voiceonwings, Gopi Thagadoor
- பொதுப்பயன்பாட்டு நீட்சிகள்
- விசேட பயன்பாட்டு நீட்சிகள்
- மேம்பட்ட பயனர்களுக்கு
- ஒலிப்பதிவில் இல்லாதவை
- நன்றி
கவனிக்க:
ஃபயர்ஃபொக்ஸ் என்பது ஒரு பதிவுசெய்யப்பட்ட வியாபாரக்குறியாகும். நாம் எந்த மொழியில் கதைப்பதாக இருந்தாலும் அதற்குரிய சரியான பெயரைச்சொல்லி அழைப்பதே பொருத்தமானது. பெயரை நேரடித் தமிழ்ப்படுத்தலில் இணக்கமில்லையாதலால் நாம் இங்கு ஃபயர்ஃபொக்ஸ் என்றே பயன்படுத்துகிறோம்.
பதிவின் விபரங்கள், இதர தகவல்கள்.
கேட்க:
தரவிறக்க:
தலைப்பு